ஹோம் /ராமநாதபுரம் /

உலக மீனவர் தினம்... ராமேஸ்வரத்தில் கடலில் மீன்பிடித்த மீனவர்களுக்கு இனிப்பு வழங்கி, சால்வை அணிவித்து மரியாதை..

உலக மீனவர் தினம்... ராமேஸ்வரத்தில் கடலில் மீன்பிடித்த மீனவர்களுக்கு இனிப்பு வழங்கி, சால்வை அணிவித்து மரியாதை..

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

Ramanathapuram District News : ராமேஸ்வரத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ஓலைக்குடா, சங்குமால் கடற்கரையில் மீனவர்கள் படகில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களுக்கு இனிப்பு வழங்கி, சால்வை அணிவித்து கடலில் கொண்டாட்டம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ஓலைக்குடா மற்றும் சங்குமால் கடற்கரை பகுதியில் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளிலும், கட்டுமரப்படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மீனவர் பேரவையின் சார்பாக 100க்கும் மேற்பட்டோர் இணைந்தும் மற்றும் சங்குமால் கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களும் ஒன்றிணைந்து படகு மூலம் கடலுக்குள் சென்றனர்.

இதையடுத்து, கடற்கரை பகுதிகளில் கட்டுமரப்படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை சந்தித்து மீனவர் தினத்தை முன்னிட்டு இனிப்புகள் வழங்கியும், சால்வை அணிவித்தும் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

இதையும் படிங்க : ராமநாதபுரம் மாவட்ட மக்களின் கைகளில் இருக்க வேண்டிய முக்கிய தொலைபேசி எண்கள்

மேலும், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருக்கக்கூடிய பெரிய விசைப்படகுகள் குறைந்த நாட்டிகள் மைல் கடல் பரப்பில் பாரம்பரியமாக நாட்டு படகில் மீன்பிடிக்கும் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்துவது தொடர் வாடிக்கை நிகழ்வாக நடைபெறுவதாகவும்,

இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும், மீனவர்கள் கடலில் இறந்துவிட்டால், ரூ.2,00,000 பதிலாக 10,00,000 வழங்கவேண்டும் என்றும் மீனவர்களை பழங்குடியினராக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து, விசைப்படகுகள் கரையோரங்களில் மீன் பிடிப்பதால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடித்தல் தொழில் பாதிப்படைவதாகவும், இவ்வாறு செயல்படும் மீனவர்கள் மீது மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மீனவர் பேரவையினர் மற்றும் நாட்டுப்படகு மீனவர்களும் கோரிக்கை விடுத்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram