முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் வண்ணமயம்.. குடும்பத்துடன் நடனமாடி ஹோலி கொண்டாடிய வடமாநில மக்கள்..!

ராமேஸ்வரத்தில் வண்ணமயம்.. குடும்பத்துடன் நடனமாடி ஹோலி கொண்டாடிய வடமாநில மக்கள்..!

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் - ஹோலி கொண்டாட்டம்

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமர் தீர்த்தம் கிருஷ்ணர் கோவிலில் பகுதியில் வசிக்கும் வடமாநிலத்தவர்களும், வட மாநில சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியுடன் ஹோலிப்பண்டிகையை கொண்டாடினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமர் தீர்த்தம் கிருஷ்ணர் கோவிலில் இங்கு பகுதியில் வசிக்கும் வடமாநிலத்தவர்களும், வட மாநில சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

ஹோலி பண்டிகையானது இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும், குறிப்பாக இந்த பண்டிகை வடமாநிலங்களில் வெகுவிமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும், தீயவையை நல்லவை வெற்றி கொள்வதற்காகவும் ஒவ்வொரு கோடைகால தொடக்கத்திலும் இது கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமர் தீர்த்தத்தில் அருகே உள்ள கிருஷ்ணர் கோவிலில் பகுதியல் வசிக்கும் வடமாநிலத்தவர்கள், ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வந்த வடமாநில பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் இந்த ஹோலி பண்டிகையை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முதலில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலர்தூவி அபிஷேகங்கள் செய்து வண்ணப்பொடிகள் பூசப்பட்டு, பின்னர் தண்ணீர் கலந்த வண்ணப்பொடிகள் அனைவரின் மீதும் தெளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வண்ணப்பொடிகளை ஒருவருக்கு ஒருவர் பூசிக்கொண்டு பாடலுக்கு நடனமாடியும், இனிப்புகள் வழங்கியும் ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின்னர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

First published:

Tags: Holi, Holi Festival, Local News, Ramanathapuram, Rameshwaram