முகப்பு /ராமநாதபுரம் /

ஹோலி கொண்டாட தயாராகும் ராமேஸ்வரம் மக்கள்.. கலர்பொடி விற்பனை ஜோரா நடக்குது..

ஹோலி கொண்டாட தயாராகும் ராமேஸ்வரம் மக்கள்.. கலர்பொடி விற்பனை ஜோரா நடக்குது..

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

Holi 2023 | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் திட்டக்குடி கடை வீதியில் உள்ள கடையில் விற்பனைக்காக, மதுரை, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து குறைந்த கெமிக்கல்ஸ் உடைய கலர் பொடிகள் வாங்கி வரப்பட்டு விற்க்கப்டுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கலர்பொடிகள் வாங்க சுற்றுலா பயணிகள் மற்றும் இங்கு வசிக்கும் வடமாநிலத்தவர்கள் ஆர்வம் காட்டுவதால் கலர்‌பொடி‌களில் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஹோலி பண்டிகையானது இந்தியாவில் குறிப்பாக வட மாநிலத்தவர் சிறப்பாக கொண்டாடும் பண்டிகையில் ஒன்றாகும். இந்த பண்டிகையானது வாழ்வில் மகிழ்ச்சி, தீயவற்றை நல்லவை வெற்றி பெற்றதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால இறுதியிலும், கோடைகால தொடக்கத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, புதன்கிழமை ஹோலி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஏராளமான வடமாநிலத்தவர்களும், ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தவர்களும் மற்றும் அரசு அதிகாரிகளும் ஹோலி பண்டிகை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் வண்ணப்பொடிகளை உடல் முழுவதும் பூசி ஆனந்தமாக விளையாடுவர். இதனால் கடைகளில் கலர்பொடிகள் விற்பனை அமோகமாக நடைபெறுவருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

கலர்பொடி விற்பனை

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் திட்டக்குடி கடை வீதியில் உள்ள கடையில் விற்பனைக்காக, மதுரை, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து குறைந்த கெமிக்கல்ஸ் உடைய கலர் பொடிகள் வாங்கி வரப்பட்டு விற்க்கப்டுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதன் விலை ஒரு பாக்கெட் ரூ.20 என்றும் மொத்தமாக 10 பாக்கெட ரூ. 200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை இங்கு வசிக்கும் வடமாநிலத்தவர்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் வடமாநில தொழிலாளர் விரும்பி வாங்கிச் செல்வதாக மகிழ்ச்சியாக கூறுகின்றனர்

First published:

Tags: Holi, Holi Festival, Local News, Ramanathapuram, Rameshwaram