முகப்பு /ராமநாதபுரம் /

அறுந்து விழுந்த அனுமன் வால்.. ராமேஸ்வரம் அபய ஆஞ்சநேயர் கோயில் உருவான கதை தெரியுமா?

அறுந்து விழுந்த அனுமன் வால்.. ராமேஸ்வரம் அபய ஆஞ்சநேயர் கோயில் உருவான கதை தெரியுமா?

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் அபய ஆஞ்சநேயர் கோயில்

Ramanathapuram Abhaya Anjaneyar temple | ராமநாதபுரத்தில் அமைந்துள்ள அபய ஆஞ்சநேயர் கோயில் வால் அறுந்த அனுமன் கோயில் என்றும் அழைப்பர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமாயண கதையில் ஆஞ்சநேயர் கோபமடைந்து சீதாபிராட்டி வைத்த சிவலிங்கத்தை தனது வாலால் அசைக்கும் போது அவருடைய வாலறுந்து விழுந்த இடம் தான் இந்த அபய ஆஞ்சநேயர் கோவில் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஆலயம் பற்றியசிறப்புகளைக் தற்போது பார்கலாம்.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக இந்த அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் இருக்கிறது. கோயிலின் பிரதான தெய்வமான ஆஞ்சநேயர் அபய ஆஞ்சநேயர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தீர்த்தம் அனுமன் தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலிருந்து ஒருகிலோ மீட்டர் தொலைவில் பத்திரகாளி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ளது, இந்த அபய ஆஞ்சநேயர் கோவில். இந்த கோவில் ராமாயண கதையில்,ராவணனை ராமபிரான் கொன்று சீதாபிராட்டியை மீட்டு வந்ததாகவும், கடும் சிவபக்தன் ராவணனை கொன்றதால் ராமபிரானுக்கு தோஷம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தோஷம் நீங்க ராமபிரான் அக்னி தீர்த்தம் கடற்கரையில் சிவலிங்கம் வைத்து பூஜை செய்ய கைலாயத்திலிருந்து லிங்கத்தை எடுத்துவர ஆஞ்சநேயர் புறப்பட்டு சென்றதாகவும். ஆஞ்சநேயர் திரும்பிவர தாமதம் ஏற்பட்டதாகவும் அப்போது சீதாபிராட்டி சுற்றி இருந்த மணலினை வைத்து லிங்கம் பிடித்து, அந்த லிங்கத்தை பூஜை செய்து வழிபட்டகாகவும் சொல்லப்படுகிறது. இதன் பிறகு லிங்கத்தோடு வந்த ஆஞ்சநேயர்,மணலினால் ஆன லிங்கத்தை பார்த்து கோபமுற்றாராம்.

ஆஞ்சநேயர் கோபமடைந்து அந்த லிங்கத்தை தனது வாலால் சுற்றி பெயர்த்து எடுக்க முற்பட்டபோது, லிங்கத்தை அவரால் அசைக்க முடியாமல் வால் அருந்து விழுந்த இடம் தான், இந்த கோவில் என்றும் சொல்லப்படுகிறது. தனது வால் அருந்ததால், தான் செய்தது தவறு என்று அறிந்த ஆஞ்சநேயர் சில அபச்சாரம் செய்த குற்றம் நீங்க இவ்விடத்தில் தீர்த்தத்தினை உருவாக்கி தனது பாவம் போக்க நீராடியுள்ளார். இந்த ஆலயத்தின் மூலவராக ஆஞ்சநேயர் வாலறுந்தநிலையிலும் காட்சி அளித்து வருகிறார்.

இதையும் படிங்க | ராமநாதபுரத்தில் கொட்டி தீர்த்த கனமழை.. பொதுமக்கள் உற்சாகம்!

காலப்போக்கில், இத்தலமானது பக்தர்களின் பயத்தைப் போக்கி காத்தருள்பவர் என்பதால் அபய ஆஞ்சநேயர் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் உருவாக்கிய தீரத்தமானது கோவிலின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடல் மண்ணில் உருவான சுயம்பு மூர்த்தியாக, ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram, Temple