Home /ramanathapuram /

தமிழுக்கு தொண்டாற்றிய ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி வரலாறு!

தமிழுக்கு தொண்டாற்றிய ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி வரலாறு!

தமிழுக்கு தொண்டாற்றிய ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி வரலாறு!

தமிழுக்கு தொண்டாற்றிய ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி வரலாறு!

Ramanathapuram District: ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயத்தின் குழு தலைவருமான தக்கார் குமரன் சேதுபதி அவர்களை பற்றிய வரலாற்று செய்தியை காண்போம்

    ராமநாதபுரம் இளைய மன்னர் குமரன் சேதுபதி அவர்கள் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். நேற்று அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது.

    மன்னர் குமரன் சேதுபதி ராமநாதபுரம் மன்னர் மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராகப் இருந்த சண்முக ராஜேஸ்வர சேதுபதியின் மகன் டாக்டர் நாகேந்திர சேதுபதியின் புதல்வன் ஆவார்.

    இவரது மனைவி லட்சுமிகுமரன் சேதுபதி இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் மகளும் உள்ளனர். மகனின் பெயர் முத்துராமலிங்கம் என்கிற நாகேந்திர சேதுபதி, மகள் மகாலெட்சுமி நாச்சியார், மருமகன் பாலையம்பட்டி ஜமீன் அஸ்வின் என்கிற பத்மநாபா ஆவார்.

    மன்னர் குமரன் சேதுபதி ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கடைசி ஜமீன் ஆவார், கடந்த 25 ஆண்டுகளாக குமரன் சேதுபதி ராமேஸ்வரம் கோவில் தக்காராக பொறுப்பு வகித்தார். உலகத்தமிழ் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.மேலும், இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுக்களுக்காக தமிழக அரசின் முதல் தமிழ்த்தாய் விருதை 2012-ம் ஆண்டில் பெற்றார். மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

    மேலும், ரிபேல் முத்துராமலிங்க சேதுபதியின் மக்கள் நல இயக்கத்தலைவராகவும், 2006-ம் ஆண்டில் ராமநாதபுரத்தில் உள்ள ராஜா மேல்நிலைப்பள்ளியின் நிர்வாக செயலாளராகவும், விளையாட்டில் ஈடுபாடு கொண்ட இவர் பூப்பந்து, கால்பந்து விளையாட்டு ஆய்வாளராகவும் இருந்தார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி