Home /ramanathapuram /

தசரதருக்கு குழந்தை வரம் அருளிய திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் கோவிலின் ராமாயண தொடர்பும்.. சிறப்புகளும்..

தசரதருக்கு குழந்தை வரம் அருளிய திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் கோவிலின் ராமாயண தொடர்பும்.. சிறப்புகளும்..

திருப்புல்லாணி

திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர்..

Thiruppullani shri Aadhi Jagannatha Perumal Thirukoil | ராமநாதபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்புல்லாணி. இங்கு அமைந்துள்ள ஆதிஜெகநாதபெருமாள் ஆலயத்தில் பல்வேறு நேர்த்திகடன் செலுத்த பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக குழந்தை வரம் கேட்டு ஏராளமானோர் வருகின்றனர். இதற்கு காரணமாக திகழும் ராமாயண வரலாறு குறித்து அறிவோம்.. 

மேலும் படிக்கவும் ...
ராமநாதபுரம் அடுத்துள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் புனிதத்தலமானது ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையது.. 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.  ராமபிரானின் தகப்பனான தசரதன், குழந்தை வரம் வேண்டி  இலங்கைக்கு செல்லும் வழியில், இரவு நேரமானதால் திருப்புல்லாணியில் தங்கினார். அவர் உறங்கும் போது தலையனை தேவைப்பட்டதால் அக்காட்டில் செழித்து வளர்ந்திருந்த தர்ப்பை புற்களை எடுத்துவந்து தலைக்கு தலையனையாக வைத்து உறங்கினார். திருப்புல்லனை என்றிருந்த ஊரானது திருப்புல்லாணி என மருவி வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

ஆதிஜெகநாதப்பெருமாள் ஆலயத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்திய தசரதர், இந்த யாகத்தின் போது தேவதூதர் அளித்த பாயாசத்தை தனது மூன்று மனைவிகளுக்கும் வழங்கினார். இதன் பலனாக தான் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருகணன் ஆகியோர் பிறந்ததாக ஐதீகம் உள்ளது.

திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதர் கோவில்..


கோவிலில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள சேதுக்கரையில் நீராடி, பின்பு ஜெகநாதர் கோவிலில் உள்ள நாகர் சிலைக்கு முன்பாக கணவனும் மனைவியும் உபவாசம் இருந்து, பின்பு அன்றிரவு கோவிலில் தங்கவேண்டும். இதற்கு அடுத்தநாள் காலையில் நாக பிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டி யாகம் செய்ய வேண்டும். யாகம் முடிந்ததும் பிரசாதமாக பால் பாயசம் கோவிலில் தரப்படும். இதனை அருந்தினால் குழந்தை  பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதற்காக வெளிமாவட்டங்கள் முதல் வெளி மாநிலங்களில் இருந்தும் வருகை தந்து தங்கி செல்கின்றனர்.

திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதர் கோவில்.. முகப்பு தோற்றம்..


மேலும், ராமர் சீதையை மீட்க இலங்கை செல்வதற்கு, கடலில் ராமர்பாலம் அமைக்க சமுத்திரியிடம் அனுமதி கேட்டார். அப்போது, மூன்று நாட்கள் தர்பைப்புல்லின் மீது சயனம் மேற்கொண்டார். இதனடிப்படையில் ராமர் ஆதிஷேசன் மீது தர்பப்பை விரித்து அதில் பயணிக்கும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.

திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதர் கோவில்..


ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.

திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதர் கோவில் குளம்


ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள் ஆலயத்திற்கு செல்லும் பாதையை காட்டும் கூகுள் வரைபடம்..



கோவில் திறப்பு நேரம் மற்றும் விஷேச நாட்கள்:

இவ்வளவு சிறப்புடைய இந்த திருத்தலமானது காலை 7 மணிமுதல் மதியம் 12:30 மணி வரையிலும், மாலை 3;30 முதல் இரவு 8:30 மணி வரையிலும் பூஜைகளுக்காக திறந்திருக்கும். காலை 7 மணிக்கு நடை திறந்தவுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பங்குனி, சித்திரை மாதம் திருக்கல்யாணம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் 9ம் நாள் விஜயதசமி திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி, சித்திரை மாதம் தேரோட்டம் தேரோட்டம் நடைபெறுகிறது
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி