முகப்பு /ராமநாதபுரம் /

தடையை மீறி கச்சத்தீவில் கொடியேற்ற முயன்ற இந்து அமைப்பு- கைது செய்த காவல்துறை

தடையை மீறி கச்சத்தீவில் கொடியேற்ற முயன்ற இந்து அமைப்பு- கைது செய்த காவல்துறை

X
கைது

கைது செய்யப்பட்ட இந்து அமைப்பு

Ramanathapuram | கச்சத்தீவில் தேசியக் கொடியேற்ற முயன்ற காவி புலிப்படையைச் சேர்ந்தவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Rameswaram, India

குடியரசு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவிற்கு தேசிய கொடியை ஏற்றச் சென்ற காவி புலிப்படையினர், இந்து மக்கள் நல இயக்கத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் இன்று 74-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தடையினை மீறி அக்னி தீர்த்தம் கடற்கரையில் இருந்து கடல் வழியாக சென்று கச்சத்தீவில் கொடியேற்ற முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து ஆர்பாட்டத்தில் கட்சத்தீவை மீட்கவும், பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் எந்தவொரு சிரமமும் இன்றி மீன்பிடிக்கவும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் கண்டித்தும், கோசங்களை எழுப்பினர்.

ரூ.15,000 சம்பளம் : ராமநாதபுரத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணி - தகுதிகள் என்ன?

தடையை மீறி ராமேஸ்வரமத்தில் அக்னி தீர்த்தம் கடற்கரையில் இருந்து கச்சத்தீவிற்கு சென்று கொடியேற்ற முயற்சி செய்த காவி புலிப்படை மற்றும் இந்து மக்கள் நல இயக்கத்தினர் 18 பேரை காவல்துறையினர் கைது செய்ததனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram