Home /ramanathapuram /

பேருந்துகளில் பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் - பரமக்குடியில் அதிரடி..

பேருந்துகளில் பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் - பரமக்குடியில் அதிரடி..

பேருந்துகளில்

பேருந்துகளில் பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பறிமுதல்..

Ramanathapuram District: பரமக்குடி பேருந்து நிலையத்தில் அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகளில் பொருத்தப்பட்டிருந்த 20 க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்களை அகற்றி பறிமுதல் செய்தனர்.

    பரமக்குடியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், போக்குவரத்து விதிகளை மீறி, பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ராமநாதபுரம் மாவட்டம்  பரமக்குடி நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்தை சுற்றிலும் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

    அரசு மற்றும் தனியார் பேருந்துகள், உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றது.

    இதனையடுத்து, இன்று பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் பத்மபிரியா பரமக்குடி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஆய்வு செய்யப்பட்டு போக்குவரத்து விதிகளை மீறி பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் பேருந்துகளில் எலக்ட்ரிக் ஹாரன்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும், ஏர் ஹாரன்கள் பயன்படுத்தக்கூடாது என பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    மேலும் டிரை சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த டீசல் இன்ஜின்களையும் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டது. பரமக்குடி பேருந்து நிலையத்தில் அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகளில் பொருத்தப்பட்டிருந்த 20 க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்களை அகற்றி பறிமுதல் செய்தனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    First published:

    Tags: Paramakudi Constituency, Ramanathapuram

    அடுத்த செய்தி