தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் மீன்பிடிப்பு முறைக்கு பல்வேறு இயந்திரங்கள் வந்துவிட்டன. ஆயினும், மனிதனுடைய உழைப்பை வைத்து பழமை மாறாமல் தனுஷ்கோடிமீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கரைவலை மீனுக்கு உள்ளூர் மக்களிடம் மிகப்பெரிய கிராக்கி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிராதான தொழிலாக மீன்பிடி தொழில் விளங்குகிறது. தனுஷ்கோடியில் பகுதி மீனவர்கள், பழமை மாறாமல் கரைவலை மீன்பிடிப்பு முறையில் இன்றும் ஈடுபட்டு வருகின்றனர்.
கரைவலை மீன்பிடி முறை :
கரைவலை மூலம் பிடிக்கப்படும் மீன்களுக்கு உள்ளூர் மக்களிடம் மிகப்பெரிய கிராக்கி இருந்து வருகிறது. ஆழ்கடலுக்கு சென்று மீன்களை பிடித்து வந்தாலும், அந்த மீன்களை பொதுமக்கள் விரும்புவதில்லை. ஆழ்கடல் மீன்களைவிட கரைவலை மீன்களைதான் ராமேஸ்வரம் மக்கள் அதிகமாக நாடிச் செல்கின்றனர்.
சுவைமிகுந்த மீன்கள் :
ஆழ்கடல் மீன்பிடிப்பு முறையில் ஒருநாள் முழுவதும் மீன்கள் பிடிக்கப்பட்டு ஐஸ்கட்டிகள் வைத்து பின்பு பிடிபட்ட மீன்கள் கரைக்கு கொண்டு வருவது வழக்கம். இதானல், அதன் சுவை குறையும் என்று சொல்லப்படுகிறது. இதனால் விசைப்படகு மீன்களை அப்பகுதி மக்கள் அதிகம் விரும்புவதில்லை.
மாறாக, கரைவலை மீன்பிடிப்பு முறையானது, மீன்கள் வலையில் சிக்கி கரைக்கு வரும்போது துடிதுடித்து உயிருடன் வருவதை பார்க்கமுடியும். அவ்வாறு கொண்டுவரப்படும் மீனை உயிருடனேயே வாங்கி செல்கின்றனர். இதனால் இதற்கு சுவை அதிகம் என்று செல்கின்றனர்.
மீன்பிடி முறை :
இந்த மீன்பிடிப்பு முறையானது, அதிகாலையிலேயே தொடங்கிவிடும். காலையில் குறிப்பிட்ட தூரம் அதாவது வலையை கரையில் இருந்து இழுத்தால் எவ்வளவு தூரம் வருமோ அதுவரை துடுப்பு படகில் சென்று வலையை போட்டுவிட்டு கரைக்கு வந்துவிடுவார்கள். பின்னர் சிறிது நேரம் கழித்து, கரையில் இருந்து வலையின் இருமுனையையும் வலது பக்கம் 10 நபர்கள் வரையிலும் அதேபோல இடதுபக்கம் 10 நபர்கள் என மீனவர்கள் இணைந்து வலையை கரையை நோக்கி இழுப்பார்கள்.
இவ்வாறு இழுக்கும்போது, மீன் வரத்து அதிகமாக இருந்தால் ஒருமுறையும், வரத்து குறைவாக இருந்தால் இரண்டு முறையும் கரைவலை இழுத்து மீன்களை கரையில் சேர்ப்பார்கள். தற்போது, சுருக்கமடி வலை மற்றும் இரட்டைமடி பயன்படுத்தி விசைப்படகு மீனவர்கள் மீன்களை இழுப்பதால் மீன்கள் அழிவை சந்திப்பதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கரைவலை மீன்களுக்கு கிராக்கி :
இவ்வாறு, பாரம்பரிய முறைப்படி பிடிக்கப்படும் மீன்களில் கலப்படம் எதுவும் செய்யமுடியாது என்பதால், மீனின் சுவை அதிகமாகஇருப்பதாகவும், இதனால்தான் ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள மீன்பிரியர்கள் கரைவலை மீன்களையே அதிகம் நாடி செல்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த பாரம்பரியமான கரைவலை மீன்பிடிப்பு தொழிலை நம்பித்தான் புயலில் உயிர் பிழைத்து மிஞ்சிய தனுஷ்கோடியில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram