குட்டி சிங்கப்பூராகவும், முக்கிய தொழில் நகரமாகவும், வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும் விளங்கிய தனுஷ்கோடி 1964-ல் வீசிய கோரப் புயலில் எப்படி அழிந்தது, மீண்டும் அதை நினைவூட்டும், கோரப்புயலில் உயிர் தப்பியவர்கள், மீண்டும் புத்துயிர் பெருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தனுஷ்கோடி.இந்த தனுஷ்கோடி இலங்கைக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பிரிட்டிஷ்காரர்களால் கட்டப்பட்ட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ரயில் நிலையம், கடற்கரை ஓரத்தில் இலங்கைக்கு வணிகத்திற்கு செல்லும் கப்பல் வசதியுடன் பெரிய துறைமுகம், மீனவர்கள் வணங்கிய பிள்ளையார் கோவில், பிரிட்டிஷ்காரர்கள் வணங்கிய தேவாலயம், மீனவர்கள் உறவினர்களுக்கு கடிதங்கள் அனுப்பி மகிழ்ந்த தபால் நிலையம், என அனைத்து ஒரே இரவில் காணாமல் போய்விட்டது.
தற்போது புயலால் அழிந்த இவையெல்லாம் வரலாற்று நினைவுஇடங்களாக உள்ளன. தனுஷ்கோடி தாண்டி அரிச்சல்முனை சென்றால் வானமும் கடலும் ஒன்றாக ஓரே நிறத்தில் இருக்கும் கண் கொள்ளாக்காட்சி.
அதில் சுறுசுறுப்பாக மீன்பிடி தொழில் செய்து வரும், தனுஷ்கோடி அழகை ரசிக்க புதிதாக திறக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தின் மேல் இருந்து பார்த்தால் பார்ப்போரை வியக்க வைக்கும் அழகை தருகிறது.
புயலில் உயிர் தப்பிய பலர் இறந்து விட்டனர்.10லிருந்து இருந்து 20 நபர்கள் மட்டுமே உயிருடன் தனுஷ்கோடி கடலை விட்டு செல்ல முடியாமல் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
புயலின் போது உயிர் தப்பிய புருஷோத்தமன் பேசும்போது, ‘புயலின் போது எனக்கு 14 வயது. எனது அப்பா, தனுஷ்கோடியில் இருந்த ரயில் நிலையத்தில் தான் பணிபுரிந்தார். எனக்கு இப்போது வயது 71.தனுஷ்கோடி ஒரு அபூர்வ நகரம்.
இதுபோல் இன்னொரு ஊர் அமைவது கடினம்.பிரிட்டிஷ்காரர்கள், கோவில், தேவாலயம், துறைமுகம், தபால் நிலையம், மருத்துவமனை அனைத்தையும் அவ்வளவு அழகாக கட்டிவைத்திருந்தனர்.
டிசம்பர் 22-ம் தேதி இரவு பலத்த காற்று மழையுடன் வீசியது. வீட்டை விட்டு வெளியே வந்தால் இடுப்பு வரைக்கும் தண்ணிர் தேங்கி நின்றது. 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று விசியது.எப்போதும் காற்று வீசுவது வழக்கம் என்று அசாதாரணமாக இருந்து விட்டோம்.
நேரம் ஆக ஆக இரவு 12 மணிக்கு புயல் காற்று வீசத்தொடங்கி காலை 4 மணி வரை பலமாக வீசியது. பயத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் கடலின் ஆக்ரோசத்தில் சிக்கி இறந்தனர். வீட்டிலேயே இருந்ததால் நாங்கள் உயிர் பிழைத்தோம்.
வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தால் காற்றில் மண் மேலே படும்போது முள் குத்துவது போல் வலித்து.அவ்வளவு ஆக்ரோசமான காற்று, ஒரு மணி நேரம் அதிகமாக காற்று வீசியிருந்தால் தற்போது உள்ள மிச்சமும் இருக்காது நானும் இருந்துருக்க மாட்டேன்.
சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ரயிலானது ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்தது.அதில் பயணித்த ஏராளமானோர் உயிரிழந்து பிணமாக கிடந்தனர். அதில் 40-க்கும் மேற்பட்ட குஜராத்தைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவர்களும் இறந்தனர்.
கோரப்புயலில் தப்பிய எங்களுக்குமோட்டார் படகு, ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட்டுஅழைத்துச் சென்று பின்பு, ராமேஸ்வரம் ரயில் நிலையக் கட்டிடங்களிலும், மீனவர்களை மண்டபம் முகாம் கட்டிடத்திலும் தங்கவைத்தனர்.
அப்போது தமிழகத்தில் காமராஜர் ஆட்சியில் இருந்தார், பிரதமராக இந்திராகாந்தி இருந்தார்கள்.எம்ஜிஆர் மட்டும் எங்களை பார்க்க வந்து எங்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் உதவிகளை செய்து தந்தார்.
கோரப்புயல் வீசி 58 வருடங்கள் கடந்துவிட்டது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத இந்த இடத்தில் உயிரை பிடித்துக்கொண்டு இங்கிருந்து செல்ல மனம் இல்லாமல் வாழ்ந்து வந்தோம். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் தார்சலையானது, அமைக்கப்பட்டு அரிச்சல்முனை சாலை வசதி மட்டுமே உள்ளது.
சாலை அமைக்கப்பட்டதில் இருந்து அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். புயலால் அழிந்த இடங்களை கண்டு செல்கின்றனர். இதனால் உணவகங்கள், சங்கு கடைகள் வைத்து பிழைப்பு நடத்துகிறோம் என்றார்.
மேலும் புயலால் பாதிக்கப்பட்டைந்து வரலாற்று சிறப்புகளாக உள்ள கட்டிடங்களை, வெயில், மழை, காற்றினால், உடைந்து விழுகிறது. தேவாலயம் பவளப்பாறை கற்களால் கட்டப்பட்டது. மிச்சம் உள்ளதை சமூக விரோதிகள் பெயர்த்து எடுத்து விற்பனை செய்கின்றனர். இதனை தடுத்து வரலாற்று சிறப்புகள் தொல்லியல் துறையினர் பாதுகாக்க வேண்டும் என்று தனுஷ்கோடி மீனவர்கள் கூறுகின்றனர்.
செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram