ஹோம் /ராமநாதபுரம் /

மார்கழி மாதத்திற்கு முன்பே இந்த நிலையா‌? - ராமநாதபுரத்தில் அதிகாலையில் நிலவும் கடுமையான பனிமூட்டம்..

மார்கழி மாதத்திற்கு முன்பே இந்த நிலையா‌? - ராமநாதபுரத்தில் அதிகாலையில் நிலவும் கடுமையான பனிமூட்டம்..

X
ராமநாதபுரத்தில்

ராமநாதபுரத்தில் நிலவும் பனிமூட்டம்

Ramanathapuram District News : மாண்டஸ் புயல் தொடங்கியதிலிருந்து பருவமழை பெரிதாக இல்லாத நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பனியின் தாக்கம் அதிகமாகவும், காலையில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

மாண்டஸ் புயல் தொடங்கியதிலிருந்து பருவமழை பெரிதாக இல்லாத நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பனியின் தாக்கம் அதிகமாகவும், காலையில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது.

இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்லும் நிலை, மார்கழி மாதத்திற்கு முன்பே பனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.

மாண்டஸ் புயல் தொடங்கி மூன்று நாட்களாகலாகவே ராமநாதபுரம் சுற்று வட்டார பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இரவு நேரங்களில் அதிக பனிபொழிவு இருந்து வந்தது. தற்போது காலை நேரத்திலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது பனி மூட்டமாக காணப்படுகிறது.

இதையும் படிங்க : மீன்வளத் துறையை கண்டித்து ராமநாதபுரத்தில் மீனவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இதையடுத்து, இன்று அதிகாலையில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுவாக ஜனவரி மாதத்தில் தான் இவ்வாறு கடும் பனி மூட்டம் காணப்படும் மாண்டஸ் புயலால் தற்போது தொடங்கிவிட்டது.

மேலும் வாகன ஓட்டிகள் சாலையை பார்க்க முடியாமல் வாகனத்தை இயக்குவதும், வாகனத்தில் செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள், எதுவும் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரிய விட்டு குழப்பத்திலேயே வாகனத்தை இயக்கியது சென்றனர்.

இதனைத்தொடர்ந்து, சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் பகலிலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி காலை எட்டு மணி வரையிலும் வாகன ஓட்டிகள் சென்றனர். ‌

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காலை 9 மணி வரை பனிமூட்டம் இருந்த நிலையில் பிறகு பனிமூட்டம் குறைந்து வெயில் அடிக்க தொடங்கியது.

First published:

Tags: Local News, Ramanathapuram