ஹோம் /ராமநாதபுரம் /

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... பரமக்குடியில் தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் புகார்.. 

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... பரமக்குடியில் தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் புகார்.. 

X
தலைமை

தலைமை ஆசிரியர் மீது புகார் தெரிவித்த பெற்றோர்

Ramanathapuram District News : பரமக்குடி அருகே சிறுவயல் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் சிறுவயல் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜூலியஸ் ரவிச்சந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், தலைமை ஆசிரியர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக மாணவிகள் தெரிவித்த புகாரின்பேரில் கிராமத்தினர் முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்பேரில் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து விசாரணை நடத்த வந்தபோது அங்கு பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் ஜெயபால் என்பவர் மாணவிகளை மிரட்டி தலைமை ஆசிரியர் குறித்து எந்த புகார் தெரிவிக்க விடாமல் தடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 6ம் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

இதையடுத்து, சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த மாணவிகளின் பெற்றோர் 200-க்கும் மேற்பட்டோர் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் புகார் கொடுத்த தலைமை ஆசிரியர் மீதும், அவர் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் அவரை காப்பாற்றும் ஆங்கில ஆசிரியர் ஜெயபால் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து மனு கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : மனோஜ்குமார் - ராமநாதபுரம்

First published:

Tags: Local News, Ramanathapuram, Tamilnadu govt