Home /ramanathapuram /

மன்னார் வளைகுடா பகுதியில் பிடிபடும் சாவாளை மீனின் சிறப்புகள் தெரியுமா?

மன்னார் வளைகுடா பகுதியில் பிடிபடும் சாவாளை மீனின் சிறப்புகள் தெரியுமா?

சாவாளை

சாவாளை மீன்

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதிகளில் கிடைக்கக் கூடிய சாவாளை மீன்கள் கருவாடுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India
ரிப்பன் க்பிஸ் என்றழைக்கூடிய மன்னார் வளைகுடா பகுதியில் ஆழ்கடலில் வாழும் சாவாளை மீனானது கருவாடாக உணவிற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பகுதிகளில் அதிகளவு கிடைக்கும் இந்த மீனின் சுவாரஸ்யமான சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் சாவாளை மீன்கள் துறைமுகத்தில் மீனவர்கள் ஏற்றுமதிக்காக பிடிக்கப்பட்ட மீன்களை வைத்திருந்தனர். 500 கிலோ வரையிலும் இதன் வரத்து வந்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

சாவாளை மீன்


இந்த சாவாளை மீனானது, மன்னார் வளைகுடா பகுதியில் அதிகளவில் வாழ்கின்றன. ஆழ்கடல், கரையோரப் பகுதியிலும் வாழ்கின்றன. சாவாளை மீன் கருவாடிற்கு மிகவும் சுவையானதாக இருப்பதால் இதை காயவைத்து கருவாடாக மாற்றி உண்கின்றனர், கருவாடாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பாதி ஆள் உயரத்தில் சாவாளை மீன்


தமிழகத்தில் பரவலான மாவட்டங்களுக்கு கருவாடாக அனுப்பப்படுகிறது, தூத்துக்குடி, கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் கப்பல்கள் மற்றும் வான்வழி போக்குவரத்து மூலமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சீசன் நேரம் என்றால் 10 டன் வரையிலும் இந்த மீனின் வரத்து கிடைக்கும். தற்போது சீசன் அற்ற காலம் என்பதால் கிலோ கணக்கில் வரத்து கிடைத்துள்ளது. கிலோவிற்கு 300 முதல் 350 வரையிலும் விற்க்கப்படுகிறது.

ஒரு மீனின் எடை ஜந்து கிலோ வரையிலும் இருக்கும். ஆழ்கடலில் பிடிபடும் மீன் கருப்பு நிறத்திலும், கரையோரங்களில் இருப்பது வெளுத்த சாம்பல் நிறத்திலும் இருக்கும். இரவின் நேரத்தில் இறால் மீன்களை பிடித்து வேட்டையாடி உண்ண நீரின் மேற்பரப்பில் வருவதால் மீனவர்கள் வீசும் வலையில் மாட்டிக்கொள்ளும்.

கடினமான முள் கொண்ட இம்மீனில் புரதச்சத்து நிறைந்து காணக் கூடியதால் உணவுக்கு நல்ல சுவையுடன் உள்ளது. அதிகப்பட்ச நீளமாக 100 செ.மீ வரையிலும், 11 கிலோ எடை வரையிலும் வாழக்கூடியது. உணவுகளாக ஓடுடைய கணுக்காலிகள், சிறிய வகை மீன்களை வேட்டையாடி உண்டு வாழ்கின்றன.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி