முகப்பு /ராமநாதபுரம் /

அடர்ந்த காட்டிற்குள் மர்மமாக இருக்கும் ஆங்கிலேயர்களின் கல்லறைகள்.. ராமேஸ்வரம் பாம்பனில் ஒரு திகில் பயணம்..!

அடர்ந்த காட்டிற்குள் மர்மமாக இருக்கும் ஆங்கிலேயர்களின் கல்லறைகள்.. ராமேஸ்வரம் பாம்பனில் ஒரு திகில் பயணம்..!

X
ஆங்கிலேயர்களின்

ஆங்கிலேயர்களின் கல்லறை

Graves of The British : ராமேஸ்வரம் பாம்பனில் அடர்ந்த வனப்பகுதிக்குள் மர்மமாக உள்ள ஆங்கிலேயர்களின் கல்லறைக்கு ஒரு திகில் பயணம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தின் வயது இந்த மாதத்துடன் 110 ஆண்டுகளை கடக்க உள்ளது. இந்த ரயில் பால பணியின்போது உயிரிழந்த பொறியாளர்கள் மற்றும் வேலையாட்களின் கல்லறை பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகம் செல்லும் வழியில் இடதுபக்கமாக கருவேலம் மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளது.

மண்டபம் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்க 1911ம் ஆண்டு கடலுக்கு நடுவே ரயில் பாலமானது பிரிட்டிஷ்காரர்களால் கட்டப்பட்டது‌. அப்போது, கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஆங்கிலேய பொறியாளர் தங்களது உயிர்களை பணயம் வைத்து பணிகளை மேற்கொண்டு ரயில் பாலத்தினை கட்டி முடிந்தனர். கட்டுமான பணியில் ஈடுபட்டுருந்தவர்கள் சிலர் வயது முதிர்வு காரணமாக இயற்கை மரணங்கள் அடைந்தனர்.

மேலும் சிலர் பணியின்போது விபத்துகள் ஏற்பட்டு மரணம் அடைந்தனர். இதனால் அப்போதைய சூழலில் உடல்களை அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாத காரணத்தால் பாம்பன் தெற்குவாடி பகுதியில் சி.எஸ்.ஜ தேவாலயம் எதிரே உள்ள பகுதியில் உடல் தகனம் செய்யப்பட்டு விலையுயர்ந்த மார்பில்ஸ் கற்கள், கிரானைட் கற்களை கொண்டு அமைக்கப்பட்டு அடையாளம் காண்பிக்கப்பட்டது.

காலப்போக்கில் தற்போது, 100 ஆண்டுகள் கடந்த நிலையில் மார்பில்ஸ் மற்றும் கிரானைட் கற்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டு பராமரிப்பு இன்றி கருவேலம் மரங்கள் சூழ்ந்து சிதிலமடைந்து இருக்கும் இடம் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் ஆங்கிலேயர்களின் கல்லறைகளும், 20க்கும் மேற்பட்ட பாம்பன் பகுதியில் வாழ்ந்தவங்களின் கல்லறைகளும் இங்கு உள்ளது. கல்லறைகள் அந்த பகுதியில் இருப்பது அந்த பகுதி மக்களுக்கே தெரியவில்லை.

இந்நிலையில், பாம்பன் ரயில் பாலத்தினை அமைப்பதற்கு தங்களது உயிர்களை இழந்து ராமேஸ்வரம் தீவு பகுதி மற்றும் தனுஷ்கோடி பகுதியை தொழில் நகரமாக மாற்றி வளர்ச்சி அடைய ஒரு முக்கிய போக்குவரத்து வழித்தடமாக அமைத்து உயிர்களை நீத்தவர்களின் கல்லறைகள் தற்போது, எந்தவொரு பராமரிப்பும் இன்றி இருக்கும் இடம் தெரியாமல் இருப்பது மனவேதனையாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையடுத்து, தீவு பகுதியில் இன்னுயிர் நீத்து பாலம் அமைத்து பலவித வளர்ச்சியை ஏற்படுத்தி கொடுத்த ஆங்கிலேயர் கல்லறையை புதிய ரயில் பாலம் திறக்கும் முன்பு சுத்தம் செய்து அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும், கல்லறைகளை புதுப்பித்து பராமரித்து சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் தீவு பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மீனவர்கள் கூறுகின்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram