ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் நாளை கிராம சபை கூட்டம் - முக்கிய விவாதப்பொருள் பற்றிய விவரங்கள்

ராமநாதபுரத்தில் நாளை கிராம சபை கூட்டம் - முக்கிய விவாதப்பொருள் பற்றிய விவரங்கள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Ramanathapuram District News : ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை (செவ்வாய் கிழமை) கிராம சபை கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை (நவம்பர் 1ம் தேதி) கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டமானது காலை 11 மணிக்கு துவங்குகிறது. இதில், அரசு விதித்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு வழிமுறைகளுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளையும் கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

இந்த கூட்டத்தில், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணி புரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

Must Read : போடிமெட்டு சுற்றுலா... மெய்மறக்க வைக்கும் இயற்கை அழகு! - தேனி டூரிஸ்ட் ஸ்பாட்

மேலும், ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி வரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உருவாக்குதல், பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்கள், மக்கள் நிலை ஆய்வு, சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், கலைஞர் வீட்டு வசதித் திட்ட பயனாளிகள் தேர்வு செய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்க அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி ராமநாதபுரம் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Ramanathapuram, Village