முகப்பு /ராமநாதபுரம் /

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் செல்லும் ஆளுநர் ரவி.. ராமநாதபுரம் சுற்றுப்பயண விபரம் இதோ!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் செல்லும் ஆளுநர் ரவி.. ராமநாதபுரம் சுற்றுப்பயண விபரம் இதோ!

ஆளுநர் ரவி, பசும்பொன் தேவர்

ஆளுநர் ரவி, பசும்பொன் தேவர்

Governor Ravi Ramanathapuram Visit | ராமநாதபுரம் செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏப்ரல் 18 மற்றும் 19ம் தேதிகளில் மீனவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் செல்லும் ஆளுநர் ஆர்.என் ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற உள்ளார். இதில் முதலாவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் - ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார். ஆளுநர் வருகையை யொட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

ஆளுநர் சுற்றுபயணம் விபரம் பின்வருமாறு:-

18-ம் தேதி

காலை 11.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை - ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா மாணவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடுகிறார்.

மதியம் 12.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை ஆளுநர் ஆர்.என்.ரவி, ராமேஸ்வரத்தில் கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்களுடன் உரையாடுகிறார்.

மாலை 04.40 மணி முதல் மாலை 05.30 மணி வரை - தேவிபட்டினத்தில் உள்ள நவக்கிரக கோவிலுக்கு செல்லுகிறார்.

மாலை 05.30 மாலை 06.00 மணிக்கு - தாய் ரத்ன மஹால், தேவிபட்டினம் மீன்பிடி சமூக உறுப்பினர்களுடன் உரையாடுகிறார்.

19-ம் தேதி

காலை 10.10 மணி முதல் - 10.40 மணி வரை - உத்தரகோசமங்கை மங்கள நாத சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாலை 03.45 மாலை 04.00 மணிக்கு ஆளுநர் - தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு மலர் தூவி மரியாதை செய்கிறார்.

top videos

    மாலை 04.45 மணி முதல் 05.00 மணி வரை - பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தவிருக்கிறார்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram, RN Ravi