ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் புகையிலை பொருள் குறித்து விழிப்புணர்வு.. அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு..

ராமநாதபுரத்தில் புகையிலை பொருள் குறித்து விழிப்புணர்வு.. அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு..

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram District News : ராமேஸ்வரம் அரசுப் பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் அரசுமேல்நிலைப் பள்ளியில் புகையிலை விழிப்புணர்வு குறித்து தேசிய மாணவர் படை மாணவர்கள் விழிப்புணர்வு பிரச்சார பேரணியில் ஈடுபட்டனர். நான்கு ரத வீதிகளிலும் சுற்றி மீண்டும் பள்ளிக்கு சென்றனர்.

புகையிலை பொருள்களால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி 200-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு புகையிலை விழிப்புணர்வு பிரச்சார பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியானது பள்ளி வளாகத்தில் தொடங்கி ராமநாதசுவாமி திருக்கோவிலில் நான்கு ரத வீதிகள் வழியாக சுற்றி வலம்வந்து பின் மீண்டும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.

இதையும் படிங்க : இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி!

இந்நிகழ்ச்சியானது, பள்ளியின் வளாகத்தில் இருந்து துவங்கியது. இதனை பள்ளி தலைமை ஆசிரியர் துவக்கி வைத்தார்கள். நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் காரைக்குடி என்சிசி பெட்டாலியன் வேல்முருகன், உடற்கல்வி ஆசிரியர் லட்சுமணன் ஜே.ஆர்.சி கவுன்சிலர் தினகரன் தேசிய மாணவர் படை அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்டோர் 200 மாணவர்களுடன் கலந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram