முகப்பு /ராமநாதபுரம் /

புதிய அரசாணையை ரத்து செய்க..! - வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டம்

புதிய அரசாணையை ரத்து செய்க..! - வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டம்

அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் புதிய அரசாணை 56-யை ரத்து செய்ய கோரி வகுப்புகளை புறக்கணித்து காலவரிசையைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் புதிய அரசாணை 56-யை ரத்து செய்ய கோரி வகுப்புகளை புறக்கணித்து காலவரிசையைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக 66 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் டி.ஆர்.பி மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் மூலம் 2391 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்ய குறிப்பானை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது,

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக உதவி பேராசிரியர்களை நியமனம் செய்யப்படும் என தமிழக அரசு அரசாணை 56ஐ வெளியிட்டுள்ளது. இதனால், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள் பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, புதிய அரசாணையை ரத்து செய்து பழைய அரசாணைகளின் படி உதவி பேராசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் எனக் கூறி பரமக்குடி அரசு கலைக் கல்லூரி முன்பாக கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

First published:

Tags: Local News, Protest, Ramanathapuram