முகப்பு /ராமநாதபுரம் /

பரமக்குடியில் பழுதாகி சாலையில் நின்ற அரசு பேருந்து.. பயணிகள் தள்ளிவிட்டு இயங்க வைத்த அவலம்.. 

பரமக்குடியில் பழுதாகி சாலையில் நின்ற அரசு பேருந்து.. பயணிகள் தள்ளிவிட்டு இயங்க வைத்த அவலம்.. 

X
பழுதாகி

பழுதாகி சாலையில் நின்ற அரசு பேருந்து

Ramanadhapuram News | பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் அரசு பேருந்து திடீரென பழுதாகி சாலையில் நின்றதால் பயணிகள் பேருந்தினை தள்ளும் அவலநிலை ஏற்பட்டது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்தை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு இரவில் பணிக்கு செல்பவர்களுக்கும், பள்ளி கல்லூரிகள் செல்லும் மாணவர்களின் வசதிக்காக டவுன் பஸ் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து முதுகுளத்தூர் செல்வதற்காக டவுன் பஸ் தயாரான நிலையில் பயணிகள் பேருந்து முழுவதும் அமர்ந்திருந்தனர். இந்த பேருந்து பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு வெளியே வந்தது. அப்போது பேருந்தில் கோளாறு ஏற்பட்டு பழுதாகி சாலையில் நின்றுவிட்டது‌‌. பேருந்தின் ஓட்டுநர் நீண்டநேரமாக முயற்சி செய்தும் பேருந்தானது இயங்கவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையடுத்து, நீண்டநேராமாகியும் பேருந்து ஸ்டார்ட் ஆகாததால் அதில் இருந்த பயணிகள், பெண்கள் உட்பட அனைவரும் பேருந்தில் இருந்து கீழிறங்கி பேருந்தினை தள்ளிவிட்டு இயங்க வைத்துள்ளனர். பெரும்பாலும் கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு பழுதாகுவதாக பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பயணம் செய்யும் பயணிகளே பேருந்தினை தள்ளிவிட்டு இயக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Ramanathapuram