ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீர, தீர செயல்கள் புரிந்த சிறுமிகள் தமிழக அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீர, தீர செயல்கள் புரிந்த சிறுமிகள் தமிழக அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்..!

ராமநாதபுரம் கலெக்டர்

ராமநாதபுரம் கலெக்டர்

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டத்தை சேரந்த 18 வயதுக்கும் உட்பட்ட பெண் குழந்தைகள் வீர, தீர செயல் செய்திருந்தால், அவர்களுக்கு மாநில அரசு சார்பில் விருதும், ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தை சேரந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் வீர, தீர செயல் செய்திருந்தால் அவர்களுக்கு மாநில அரசு சார்பில் விருதும், ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், பாடுபட்டு வீர, தீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் மூலமாக அதற்கான மாநில விருது ஒன்றை அறிவித்து அரசாணை பிறப்பித்து கடந்த 2017ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி வருடந்தோறும் மேற்குறிப்பிட்டவாறு சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி - 24) பாராட்டு பத்திரமும், ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. அதேபோல், அடுத்த வருடம் ஜனவரி 2023ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட 18 வயதிற்குட்பட்ட (31 டிசம்பர் 2022-ன்படி) மேற்குறிப்பிட்டவாறு தகுதியான பெண் குழந்தை களிடமிருந்து விண்ண ப்பங்கள் நவம்பவர் 30ம் தேதி வரை வரவேற்கப்ப டுகின்றன.

இதையும் படிங்க : ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு 

விருதிற்கான விண்ணப்பங்கள் தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமர்பிக்கப்பட வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவ்விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் சமூக நல இயக்குநரகத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வு குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்ட, அனைத்து தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு ஜனவரி 24ம் தேதி மாநில விருது வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram