முகப்பு /ராமநாதபுரம் /

தனுஷ்கோடியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பழக் கழிவுகள்... நடவடிக்கை எடுக்க கோரிக்கை 

தனுஷ்கோடியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பழக் கழிவுகள்... நடவடிக்கை எடுக்க கோரிக்கை 

X
பழக்

பழக் கழிவுகள்

Ramanathapuram district | பழக்கழிவுகளை இனிமேல் கொட்டாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

தனுஷ்கோடி முகுந்தராயன் சத்திரம் பகுதியில் சாலையின் ஓரத்தில் கொட்டப்படும் பழக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் துர்நாற்றம் வீசி வருவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ் கோடியானது இரண்டு பக்கமும் கடல் சூழ்ந்து சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக உள்ளது. 1964-ல் ஏற்பட்ட புயலில் மிஞ்சிய பகுதிகளை காணவும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், தனுஷ்கோடியை அடுத்த அரிச்சல்முனை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் பழக்கடைகள் நடத்தி வருகின்றனர்.

இந்த கடைகளில் மிஞ்சும் மற்றும் அழுகிய பழங்களை முகுந்தராயன் சத்திரம் பகுதியில் சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சாலையில் செல்ல முடியாத நிலை உருவாகிறது. மேலும், அதில் பன்றிகள், மாடுகள் சுற்றிவதால் சுகாதாரம் சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் முகம்‌ சுழித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வனத்துறை அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து பழக்கழிவுகள் இனிமேல் கொட்டாமல் தடுக்க வேண்டும் என்றும், அதையும் மீறி கொட்டுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் தனுஷ்கோடி பகுதி மக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

First published:

Tags: Dhanushkodi, Local News, Ramanathapuram