ஹோம் /Ramanathapuram /

Ramanathapuram : இலவசமாக யோகா கற்கலாம் வாங்க...

Ramanathapuram : இலவசமாக யோகா கற்கலாம் வாங்க...

ராமநாதபுரம்

ராமநாதபுரம் - யோகா பயிற்சி

Ramanathapuram District: ராமேஸ்வரம் மங்கம்மாள் சத்திரத்தில் விவேகானந்தா கேந்திரா மற்றும் கிரீன் ராமேஸ்வரம் அமைப்பினர் இணைந்து கடந்த பத்து வருடங்களாக இலவச யோகா பயிற்சி நடத்தி வருகின்றனர்..

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ரயில்வே நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள மங்கம்மா சத்திரத்தில் காலை நேரத்தில் ஆண்களுக்கும், மாலையில் பெண்களுக்கும் என இருவேளைகளும் இலவச யோகா பயிற்சி நடத்தப்படுகிறது. யோகா பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என யோகா ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

   இலவச யோகா வகுப்புகள் குறித்து பயிற்றுநர்பூமிநாதன் கூறுகையில்;-

  கடந்த பத்து வருடங்களாக இலவச யோகா பயிற்சி நடைபெறுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை விரும்பும் மக்கள் யோகா பயிற்சி செய்ய வருவார்கள், இந்த யோகா பயிற்சி செய்யத் தொடங்கிய பத்து முதல் பதினைந்து நாட்களில் அவர்களுக்கு பயனளிப்பது உணர்ந்து தொடர்ச்சியாக வரத்தொடங்கினர்.

  ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருக்கிறவங்க அதிகமா வராங்க ஒரு வாரம் யோகா பயிற்சி செய்த பின்னர்  ரத்த அழுத்தம், சர்க்கரை  அளவுகளை மருத்துவமனையில் சோதித்துப் பார்க்கும் பொழுது குறைந்து உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள மக்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

  6 ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று வரும் செல்வி கூறுகையில்:-

  நான் இங்கு ஆறு வருடங்களாக யோகா பயிற்சியை செய்து கொண்டிருக்கிறேன், நான் கற்றுக் கொண்டது மட்டுமில்லாமல் சில கிராமங்களில் உள்ள முதியவர்களுக்கும் அவர்கள் ஊர்களுக்குச் சென்று கற்று கொடுக்கிறேன்.

  முன்பெல்லாம் நான் வீட்டில் அதிகமாக கோபப்படுவேன் ஆனால் யோகா பயிற்சி செய்ய தொடங்கியதில் இருந்தே எனக்கு அந்த கோபம் போன்ற எந்த ஒரு டென்சனும் வருவது இல்லை எனது வீட்டிலேயே இதை கூறுவார்கள். எனக்கு அடிக்கடி கால் வலி, தலைவலி, வயிற்றுவலி வருவது உண்டு இதனால் நான் சோம்பேறிகளாகவும் சுறுசுறுப்பும் இன்றி இருந்தேன் ஆனால் யோகா செய்த பின்பு அனைத்தும் இது எதுவும் தெரியாமல் மறைந்துவிட்டது.

  எனது இரண்டாவது மகனுக்கு ஆஸ்துமா இருந்தது அவன் சிறு வயதிலிருந்து சுடு தண்ணீரில் தான் குளிப்பான் சுடுதண்ணி தான் குடிப்பான், யோகா பயிற்சி செய்வதில் இருந்து அவனுக்கு ஆஸ்துமா குணமடைந்து தற்போது ஐஸ்கிரீம் குளிர்பானங்கள் உண்கிறான்.

  இலவச யோகா பயிற்சியில் 10 வயதிலிருந்து 70 வயது வரையிலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொள்கின்றனர் மேலும் இப்பகுதியை சுற்றியுள்ளவர்கள் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்று பயனாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர். ஆண்களுக்கு காலையில் 5:30 மணிமுதல் 7:30 மணிவரையிலும் பெண்களுக்கு மாலை 5:30 மணிமுதல் 7:30 மணிவரை நடைபெறுகிறது.

  இலவச யோகா பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் கிரீன் ராமேஸ்வரம் அமைப்பினை சேர்ந்த ஸ்ரீதரை 82700 02301 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..

  செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.

  Published by:Arun
  First published:

  Tags: Ramanathapuram, Rameshwaram, Yoga