ஹோம் /ராமநாதபுரம் /

Ramanathapuram | ராமேஸ்வரம் கோவில் அருகே பராமரிப்பு இல்லாமல் இலவச கழிப்பறை - பொதுமக்கள் அவதி

Ramanathapuram | ராமேஸ்வரம் கோவில் அருகே பராமரிப்பு இல்லாமல் இலவச கழிப்பறை - பொதுமக்கள் அவதி

ராமநாதசுவாமி

ராமநாதசுவாமி கோவில் அருகே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இலவச கழிவறை..

Ramanathapuram | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அருகிலுள்ள இலவச கழிவறை தண்ணீர் வசதியின்றி இருப்பதால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் அருகாமையில் உள்ள இலவச கழிப்பறை தண்ணீர் வசதி இன்றி அசுத்தமாக காணப்படுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கை உபாதைகளுக்காக திறந்தவெளிகளில் சிறுநீர் கழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதுவே விடுமுறை நாட்கள் என்றால் மக்கள் கூட்டம் லட்சத்துக்கு செல்லும்.

கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இயற்கை உபாதைகள் கழிக்க நான்கு ரதவீதிகளிலும் கழிவறைகளை கட்டியுள்ளது கோவில் நிர்வாகம். பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட இக்கழிவறைகள் சில பயன்பாட்டில் இல்லாமலும், சில பயன்பாட்டில் இருந்தும் அடிப்படையில் வசதிகள் இல்லாமலும் உள்ளது.

கிழக்கு ரதவீதியில் தமானி இல்லத்துக்கு அருகில் அமைந்துள்ள இலவச கழிப்பறை கட்டிடம் பூட்டிக்கிடந்த நிலையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு திறக்கப்பட்டது. திறக்கப்பட்டதில் இருந்து வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே திறக்கப்படுகிறது. மீதமுள்ள நாட்களில் இக்கழிவறைகளை அடைத்து வைத்துள்ளது கோவில் நிர்வாகம்.

இதனால் ஆண்கள் திறந்தவெளிகளில் சிறுநீர் கழிக்கின்றனர். பெண்கள் கட்டண கழிப்பறைக்கு செல்கின்றனர். இரவில் மது அருந்தும் செயலும் நடக்கிறது. கழிவறைகளுக்கு உள்ளேயும், வெளிப்பகுதியிலும் மது பாட்டில்கள் காணப்படுகிறது.

அவசரத்திற்கு பயன்படுத்தும் கழிப்பறை துர்நாற்றம் வீசுவதுடன் இவ்வளவு மோசமாக முகம் சுழிக்கும் வகையில் அமைந்துள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் பக்தர்கள். நோய்த்தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மது பாட்டில்கள் உடைந்து கிடக்க்கும் சூழலில் திறந்தவெளி பகுதிக்கு சிறுநீர் கழிக்க செல்வோர் காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி காயம் அடையும் சூழலும் உள்ளது.

கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, அசுத்தமாக உள்ள கழிப்பறைகளை ஒரு ஊழியரை பணியமர்த்தி தினந்தோறும் சுத்தம் செய்து பாதுகாத்து, நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோவில் நிர்வாகத்தை வலியுறுத்துகின்றனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram