முகப்பு /ராமநாதபுரம் /

இலவசமாக சுயதொழில் புரிய பயிற்சி.. ராமேஸ்வரத்தில் ஆர்வத்துடன் பயிற்சிபெறும் பெண்கள்..

இலவசமாக சுயதொழில் புரிய பயிற்சி.. ராமேஸ்வரத்தில் ஆர்வத்துடன் பயிற்சிபெறும் பெண்கள்..

X
இலவசமாக

இலவசமாக சுயதொழில் புரிய பயிற்சி

Free Self Employment Training For Women : ராமேஸ்வரத்தில் இலவசமாக சுயதொழில் புரிய பயிற்சியில் ஆர்வத்துடன் பயிற்சிபெறும் பெண்கள்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் அமிர்த வித்தியாலயம் பள்ளியில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் சங்கல்ப் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவசமாக கடல்பாசி வளர்ப்பு, அழகுக்கலை, தையல் ஆகிய பயிற்சிகள் அளித்து பெண்கள் சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கப்பட்டு வருகிறது

மத்திய அரசின் திறன் மேம்பாட்டு அமைச்சகமானது உலக வங்கியுடன் இணைந்து பெண்கள் குறுகிய காலத்தில் நீண்டகால பயன்பெறும் வகையில் பெண்கள் மேம்பாட்டிற்காக 'சங்கல்ப் எனும் தொழில் திறன் மேம்படுத்தல் மற்றும் அறிவு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் எனும் திட்டத்தை தொடங்கி உள்ளது.

இந்த திட்டத்தின் மூலமாக பெண்கள் சுயதொழில் தொடங்கவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 3 மாதங்கள் இலவசமாக தையல், அலகுகலை, கடல்பாசி வளர்ப்பு போன்ற பயிற்சிகள் பெண்களுக்கு இலவசமாக அளித்து வருகின்றனர் . மேலும் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் உள்ள 10க்கும் மேற்பட்ட மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், இதில் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள அமிர்த வித்தியாலயம் பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இலவசமாக சுயதொழில் புரிய பயிற்சி

இதையும் படிங்க : ஹெல்மெட் போடுர வரைக்கும் ஃபைன் தான்.. தஞ்சையில் வாகன ஓட்டிகளுக்கு பாரபட்சமின்றி அபராதம்.. 

இப்பயிற்சியில் தங்கச்சிமடம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தையல் மற்றும் அலகுகலை பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் ஒலைக்குடா கிராமத்தில் கடல்பாசி வளர்ப்பு பற்றிய பயிற்சியும் பெற்று வருகின்றனர். காலை முதல் மதியம் வரை 100 பேருக்கும், மதியத்தில் இருந்து மாலை வரை மற்றொரு 100 பேருக்கும் 2 பிரிவுகாளாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் பயிற்சி பெரும் பெண்கள் கூறும் போது, இலவசமாக பயிற்சி அளித்து, 3 மாத பயிற்சி முழுமையாக முடிந்த பிறகு மத்திய அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் 3000 ஊதியமும் வழங்கப்படுகிறது. இதில் கற்றுக் கொண்டு தையல் பயிற்சி மூலம் நாங்கள் வீட்டில் இருந்தபடியே துணிகள் தைத்து ஒருநாள் ரூ.500-முதல் ரூ.1000 வரை வருமானம் பெற‌முடியும்.

மேலும், அலகுகலை பயிற்சி கற்றுக்கொண்டு அழகு நிலையம் வைக்க முடியாவிட்டால் கூட தங்களால் தங்களது குடும்பத்தின் உள்ளவர்களையோ, தங்களையோ உடலை பராமரித்துக் கொள்ள முடியும் என்று கூறுகின்றனர். இந்த பயிற்சியானது 3 மாதங்களுக்கு அளிக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    3 மாதங்கள் முடிந்த பிறகு பத்திரிகை நாளிதழ்களில் விளம்பரம் படுத்தப்படும் . ஆர்வமுள்ள பெண்கள் இதில் சேர்ந்து கற்றுக்கொள்ளுங்கள் என்றும் பயிற்சி பெரும் பெண்கள் கூறுகின்றனர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram