ராமேஸ்வரத்தில் இலவச கண் மருத்துவ சிறப்பு முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்-1ல் நடைபெற்றது இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் நிதியுதவியுடன் ராமேஸ்வரம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ரோட்டரி சங்கம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது, இதில் ராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பார்வை குறைபாடு மற்றும் கண் பரிசோதனை செய்ய உள்ளவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த இலவச முகாமில் கண்புரை, மாறு கண், நீர் அழுத்தம், மாலைக்கண், நீர் வடிதல், துாரப் பார்வை, கிட்டப்பார்வை பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இம்முகாமில் 102- நபர்கள் கலந்து கொண்டதில் மருத்துவர்கள் பரிசோதித்து 54- பேரை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அழைத்து செல்லப்பட்ட வர்களுக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.