ஹோம் /Ramanathapuram /

இலவச மருத்துவ முகாம்; பயன்பெற்ற ராமேஸ்வரம் பகுதி மக்கள்

இலவச மருத்துவ முகாம்; பயன்பெற்ற ராமேஸ்வரம் பகுதி மக்கள்

இலவச

இலவச மருத்துவ முகாம்; பயன்பெற்ற ராமேஸ்வரம் பகுதி மக்கள்

ராமேஸ்வரம் நகராட்சி 14-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவமனை இணைந்து இலவச பல்நோக்கு மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமுகாம் நடைபெற்றது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ராமேஸ்வரம் நகராட்சி 14-வது வார்டு நகர் மன்றஉறுப்பினர் மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவமனை இணைந்து இலவச பல்நோக்கு மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமுகாம் நடைபெற்றதுவார்டு மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உள்ளூர் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்து சென்றனர்.

  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மதுரை வேலம்மாள் மருத்துவமனை மற்றும் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற 14–வது வார்டு கவுன்சிலர் என்.டி.முகேஷ்குமார் ஆகியோர் இணைந்து இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் ராமேஸ்வரம் திட்டக்குடி தெருவில் அமைந்துள்ள குருதுவார் மடத்தில் நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  இதையடுத்து, இலவச மருத்துவ முகாமில் மதுரை வேலம்மாள் மருத்துவமனையைச் சேர்ந்த 30 மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் 110 பேர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து வந்தனர். மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் தொடங்கி மதியம் 4 மணி வரை நடைபெற்றது.

  இந்த முகாமில் பொதுமக்களுக்கு இலவச பரிசோதனைகளான ரத்தப் பரிசோதனை, ஈசிஜி, எக்ஸ்ரே, ரத்த அழுத்தம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ இதயத்துடிப்பு, செவித்திறன், சுவாசக்கோளாறு, கண் பரிசோதனை, பல், தோல் சம்பந்தப்பட்டவை, குழந்தை என பொதுமக்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

  மேலும் குறிப்பாக நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்த நபர்களுக்கு கண்களில் பிரச்சனை ஏற்பட்டால் கண்புரை அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக வேலம்மாள் மருத்துவமனைக்கு 40 பேர் அழைத்து சென்று அறுவைசிகிச்சை செய்வதற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

  இந்த மருத்துவ முகாமில் குறிப்பிட்ட வார்டு கவுன்சிலர்கள் ரத்ததானம் வழங்கினர். இரத்த தானம் வழங்கியவர்களுக்கு வேலம்மாள் மருத்துவமனை சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது.

  இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை நகர்மன்றத் தலைவர் கே.இ. நாசர்கான் குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ சேவையை துவக்கி வைத்தார். நகர்மன்றத் துணைத் தலைவர் தெட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். நகர் மீனவ சங்கத் தலைவர் என்.ஜே. போஸ் வரவேற்புரை ஆற்றினார்.சிறப்பு அழைப்பாளராக அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

  செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Ramanathapuram