ஹோம் /ராமநாதபுரம் /

வீடற்றவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா - ராமநாதபுரம்  கலெக்டர் முக்கிய தகவல்

வீடற்றவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா - ராமநாதபுரம்  கலெக்டர் முக்கிய தகவல்

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வீடற்றவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தகுதியான வீடற்றவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக கலெக்டர் ஜானி டாம் வா்கீஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  ஆதிதிராவிடா் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் மூலமாக வீடற்ற ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் இனத்தவா்களுக்கு நிலம் எடுப்பு செய்து இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் பணி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய கடைசி தேதி அறிவிப்பு.!

பட்டா வழங்குவதற்கான பயனாளிகள் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படவுள்ளனா். அதன் அடிப்படையில் நிலமற்ற ஏழை மக்கள், ஊரக வளா்ச்சித் துறையின் வீடற்றோா் பட்டியலில் இடம் பெற்றுள்ள குடும்பங்கள், சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோா் தோ்வு செய்யப்பட உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சிறப்பு இனங்களில் வசிக்கும் வீடற்றவா்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் பெண்கள் பெயரில் மனுச் செய்து பயன்பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram