Home /ramanathapuram /

Ramanathapuram | பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

Ramanathapuram | பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

பரிசு

பரிசு பெறும் பள்ளி மாணவர்

ராமேஸ்வரம் அரசு பள்ளியில் அரசு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்து சிறப்பாக பயின்று வரும் மாணவர்களுக்கு விழுதுகள் அறக்கட்டளை சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டு விழா நடைபெற்றது 

ராமேஸ்வரம் அரசு பள்ளியில் படித்து அரசுப் பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்து சிறப்பாக பயின்று வரும் மாணவர்களுக்கு விழுதுகள் அறக்கட்டளை சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டு விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதையடுத்து அப்பள்ளியில் 2021-2022 -ல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளியில் சிறப்பாக படித்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விழுதுகள் அறக்கட்டளை சார்பாக பரிசுகள் வழங்கபட்டது.

1985-86–ம் ஆண்டு இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எட்டு வருடங்களுக்கு முன்பு விழுதுகள் என்ற அறக்கட்டளையை உருவாக்கி தொடர்ந்து எட்டு வருடங்களாக அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்து வருகின்றனர்.

படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் தொடர்ந்து எட்டு வருடங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகின்றோம். இனியும் எங்களது பங்களிப்பு தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார்கள்.

இதையடுத்து, மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளைப் பாராட்டி வழங்கினார். மாணவர்களிடம் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர், ‘மருத்துவம், பொறியாளர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை, இது மட்டுமே உங்களது கனவாக இருக்கக்கூடாது, வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு பணிகள் உண்டு.

உங்களால் எது முடியும் என்றும், உங்களுக்கு எது வருகிறது என்றும் தெரிந்து அந்த துறையில் எவ்வாறு சிறந்து விளங்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். முடிவெட்டுகின்ற தொழிலில் பொறியாளரை விட அதிகமாக வருமானம் பெறுகின்றனர். விவசாயத்தில் உங்களைப் போன்ற வளரும் சமுதாயம் அதிக ஈடுபாடு கொண்டிருங்கள். இதுபோன்ற துறைகளை தேர்ந்தெடுத்து நன்றாக படித்து நன்றாக உங்களுக்கான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி