முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் 45 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்.. கடத்தலுக்கு தயாரானதை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்!

ராமநாதபுரத்தில் 45 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்.. கடத்தலுக்கு தயாரானதை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்!

X
கடத்துலுக்கு

கடத்துலுக்கு வைத்திருந்த  மூன்று லட்சம் மதிப்புடைய 45 கிலோ கடல் அட்டை வனத்துறையி

Sea cucumber smuggling | தேவிப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக தயாராக இருந்த கடல் அட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

தேவிப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்புடைய 45-கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்த வனத்துறை அதிகாரிகள்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை கடத்த இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. தகவலைத் தொடர்ந்து வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ரோந்து பணியின்போது தேவிப்பட்டினம் மாரியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த அயூப்கான் என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது 45 கிலோ கடல் அட்டைகளை பதப்படுத்தி கடத்துலுக்கு தயார்நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, 45 கிலோ கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்து அதனை பதப்படுத்தப் பயன்படுத்தி இருந்த பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து அயூப்கானையும் கைது செய்து வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். பதப்படுத்தப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram, Smuggling