ராமாயண கதையுடன் தொடர்புடைய ராமேஸ்வரத்தில், தண்ணீரில் மிதக்கும் கற்களை சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். மிதக்கும் கற்களை பார்க்க ஆர்வத்துடன் இருக்கும் சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் வந்தால் இரண்டு கோவில்களுக்கு சென்று இந்த அதிசய கற்களை பார்க்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏராளமான அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த பகுதியில், அதிக அளவில், பவளப் பாறைகள் கடலுக்குள் உள்ளன. இந்த பவளப்பாறைகள், சுற்றிலும் கடல் சூழ்ந்து இருக்கும் ராமேஸ்வரம் தீவு பகுதியில் ஆங்காங்கே, பரவிக் காணப்படுவதால் இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க முக்கிய பங்காற்றுவதாக சொல்லப்படுகிறது.
தண்ணீரில் மிதக்கும் இந்த அதிசயகற்களானது, பவளப்பாறைகள் வகையில் ஒன்றான "பைப்கோரல்" எனப்படும் ஒரு பவளப்பாறையாகும். இந்த கற்கள் மிதப்பதற்கான காரணம் என்னவென்றால், அந்த துவாரங்கள் சுற்றிலும் பைப்போன்ற சிறிய துவாரங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக, இந்த கற்கள் நீரில் மிதப்பதாக அறிவியல் ரீதியான காரணங்கள் கூறப்படுகின்றன.
இந்நிலையில், ராமாயண கதையில், இந்த பவளப்பாறை கற்களை வைத்து தான் ராமர் இலங்கைக்கு பாலம் அமைத்து, சீதையை ராவணனிடம் இருந்து காப்பாற்றி அழைத்துவர, வானர சேனைகளுடன் சென்றதாக ராமாயண வரலாறில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனால் தான் இந்த மிதக்கும் கற்கள் பார்பதற்கு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இரண்டு கோவில்களை தவிர மற்ற கோவில்களில் இதை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இதனை சிலர் வியாபார நோக்கத்தோடு சட்டவிரோதமாக விற்க முயற்சித்த குற்றத்திற்காக. சிலர் கைது செய்யப்பட்டு சிறையிலும் உள்ளனர் .
தற்போது, இந்த கற்கள் இரண்டு ஆலயங்களில் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒன்று ராமேஸ்வரம் லெட்சுமணன் தீர்த்தம் அருகே உள்ள பஞ்சமுகி அனுமான் ஆலயத்திலும், மற்றொன்று தனுஷ்கோடியில் புயலால் சேதமடைந்த பழைய ரயில் நிலையம் எதிரே உள்ள ராஜகாளியம்மன் ஆலயத்திலும் இருக்கிறது. இங்கு வரும் பக்தர்கள் இந்த இரண்டு ஆலயங்களுக்கும் சென்று மிதக்கும் கற்கள் பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Rameshwaram