முகப்பு /ராமநாதபுரம் /

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்.. ராமநாதபுரம் மீனவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்..

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்.. ராமநாதபுரம் மீனவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்..

X
மாதிரி

மாதிரி படம்

Fishing Prohibition Begins : மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வரும்போது சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள  நிலையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் வைத்த சில கோரிக்கைகளை பார்க்கலாம்.

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் 61 நாட்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியதையடுத்து பாரம்பரிய மீன்பிடி தொழிலை நம்பியே வாழும், ராமநாதபுரம் மாவட்டம் சுற்றி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் 2000க்கு்ம மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மீன்பிடி தடைக்காலமானது நிறைவடைவதற்கு முன் மீனவர்களின் சில கோரிக்கைகளை மத்திய, மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மீனவர்களின் முக்கிய கோரிக்கைகளை தடைக்காலம் முடிவதற்குள் இலங்கை நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் செல்லும்போது எந்தவொரு பயமும், அச்சமும் இன்றிச் செல்லவும், விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பிடிக்காமல் இருக்கவும் வழிவகைச் செய்ய வேண்டும்.

எனவும், இலங்கையில் கடற்படையால் பிடிபட்டு வீணாகி கிடக்கும் மீனவர்களின் விசைப்படகுகளை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை வைக்கும் மீனவர்கள்,அதிலும் குறிப்பாக கச்சத்தீவு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசைக் வலியுறுத்துகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் துறைமுகங்களில் நிறுத்தப்படும் விசைப்படகுகள் கலவு போவதைத் தடுக்க போதிய காவல்துறையினரை பாதுகாப்பிற்கு ஈடுபடுத்த வேண்டும் என்றும் தற்போது, விசைப்படகுகளை மீனவர்கள் பாரமாரிப்பு செய்ய துவங்கியுள்ளதால், இந்த விசைப்படகுகளைப் பராமரிக்க குறைந்தது ஒரு லட்சத்திற்கு மேல் செலவாகும் என்றும் இதற்கு ஒவ்வொரு விசைப்படகிற்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும், மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram