ஹோம் /ராமநாதபுரம் /

ரூ.1 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகளை தீவைத்து எரித்த மர்மநபர்கள் - ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை

ரூ.1 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகளை தீவைத்து எரித்த மர்மநபர்கள் - ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை

வலையை இழந்த மீனவர்

வலையை இழந்த மீனவர்

ராமேஸ்வரத்தில் மீனவருக்கு சொந்தமான மீன்பிடி வலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் நாட்டுப்படகில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவருக்கு சொந்தமான ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வலையை மர்ம நபர்கள் நள்ளிரவில் தீயிட்டு எரித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள சங்குமால் கடற்கரையில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜான்பிரிட்டோ (70) என்ற முதியவர் நேற்று கடலில் நாட்டுப்படகு மூலம் மீன்பிடித்து விட்டு வலைகளை சங்குமால் கடற்கரையில் வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து, இன்று அதிகாலையில் மீன்பிடிக்க செல்ல வலைகளை வந்து பார்த்த போது மீன்பிடி வலைகள் அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்த தனியார் தங்கும் விடுதியின் காவலர் கூறியதாவது, “நள்ளிரவு 11 மணிக்கு மேல் இங்கு தீ எரிந்து கொண்டு இருந்தது.எ ன்னை பார்த்தும் இரண்டு பேர் ஓடினர். பின்பு நான் தண்ணியை ஊற்றி அனைத்தேன” என்றார்.

Also Read:  பேருந்து நிலையம் இருக்கு ஆனா இல்ல - ஆதங்கப்படும் திருவாரூர் மாவட்ட மக்கள்

மீனவரின் எரிந்த வலையில் மீன்பிடி வலை, நண்டு வலை, கணவாய் வலை இருந்ததாகவும். இதன் மதிப்பு ஒன்றரை லட்சம் என பாதிப்படைந்த மீனவர் தெரிவித்தார். ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram, Tamil News