முகப்பு /ராமநாதபுரம் /

பைஃபர் படகிற்கு மீன்பிடி அனுமதி சீட்டு விவகாரம்.. போராட்டத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்..

பைஃபர் படகிற்கு மீன்பிடி அனுமதி சீட்டு விவகாரம்.. போராட்டத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்..

X
போராட்டத்தில்

போராட்டத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்

Rameswaram Fishermen Protest | ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அனுமதி இன்றி இருக்கும் 24 பைபர் படகுகளுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்காததால், அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகமானது மாவட்டத்திலேயே மிகப்பெரிய மீன்பிடி துறைமுகமாகும். இங்கு 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 10,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கிருந்து, இலங்கை மிக அருகில் இருப்பதால், பைபர் படகுகளுக்கு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அனுமதி கிடையாது.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் விதியை மீறி அனுமதியின்றி இருக்கும் 24 பைபர் படகுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு படகுகளை துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்

இந்நிலையில், மீன்வளத்துறை அதிகாரிகளின் பைபர் படகுகளை அப்புறப்படுத்த கூறியும், படகுகளை அப்புறப்படுத்தாமல் மீன்பிடித்து வந்ததால், அவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு தர மறுக்கப்பட்டு 24 படகிற்கும் சேர்த்து ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனைத்தொடர்ந்து, அபராதம் விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பைபர் படகில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram