Home /ramanathapuram /

மீன்பிடி படகுகளும் மீன்பிடிக்க செல்லும் முறையும்.. ராமேஸ்வரம் மீனவர்கள் இப்படி தான் மீன்பிடிக்க போறாங்க..

மீன்பிடி படகுகளும் மீன்பிடிக்க செல்லும் முறையும்.. ராமேஸ்வரம் மீனவர்கள் இப்படி தான் மீன்பிடிக்க போறாங்க..

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மீன்பிடி விசைப்படகுகளை கொண்டது ராமேஸ்வரம்.  மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் முன் எப்படியெல்லாம் தங்களையும், படகுகளையும் தயார் படுத்திக்கொள்கின்றனர். மீன் பிடித்தல் முறை குறித்தும் விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரையில் மீன்பிடித்தலே பிரதான தொழிலாக விளங்குகிறது.  2020- 2021-ம் ஆண்டு தேசிய அளவில் 10 லட்சம் டன் மீன்பிடித்து, மீன்பிடி தொழிலில் தமிழ்நாட்டில் முதல் இடம் பெற்று தொடர்ந்து 3வது முறையாக முதலிடத்தில் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மீன்பிடி விசைப்படகுகளை கொண்டது ராமேஸ்வரம்.   சுமார் 900 மேற்பட்ட விசைப்படகுகளும், 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீன்பிடி தொழில் மேற்கொள்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக மண்டபம் துறைமுகம் அதிக விசைப்படகுகளையும நாட்டுப்படகுகளையும் கொண்டுள்ளது. இங்கு மீன் பிடி தொழில் எப்படி நடைபெறுகிறது. மீன் பிடிக்க செல்ல என்ன முறைகளை மீனவர்கள் மேற்கொள்கின்றனர் என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

மீன்பிடிக்க செல்லும் முறை:-

ராமேஸ்வரத்தில் காலை 6 மணிக்கு மீன்பிடி துறைமுகத்தில் தமிழக அரசால் அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. அதன்பின் கடலுக்கு மீன்பிடிக்கச் கிளம்பிச் செல்வார்கள். அதற்கு முன்பாக  விசைப்படகுக்கு தேவையான டீசலை நிரப்பிக் கொள்வார்கள், மீன்களை கெட்டுப்போகாமல் பதப்படுத்தி கரைக்கு கொண்டு வர தேவையான அளவு ஐஸ்கட்டிகள் படகுகளில் இருப்பு வைக்கப்படுகிறது.

ஒரு படகில் 6 நபர்கள் வரையிலும் செல்வர், அதில் ஒருவர் படகை இயக்குவார். கடலுக்குள் வலை வீசப்பட்டு இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து வலைகளை மீனவர்கள் இழுக்கின்றனர். காற்று சுமாராக இருந்தால் அரை மணி நேரமும் அதிக காற்று வீசினால் வலையை இழுக்க ஒரு மணி நேரமும் ஆகிறது.

இதையும் படிங்க:  இயற்கையின் அற்புதம் குருசடை தீவு..! - ராமநாதபுரத்தில் மிஸ் பண்ணக்கூடாத சுற்றுலா தலம்

இதையடுத்து, அடுத்தநாள் காலையில் மீனவர்கள் பிடித்த மீன்களை கொண்டு கரைக்கு அதாவது துறைமுகத்திற்கு திரும்புவர். ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் மீன்பிடிக்க கடலுக்கு செல்வார்கள். பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் கடலுக்கு செல்வர்.

நாட்டுப்படகின் சிறப்பு:-

நாட்டுப்படகானது மீன்பிடித் தொழிலில் மிகவும் உதவிகரமாக உள்ளது. போதிய துறைமுக வசதி இல்லாத மீன்பிடி துறைமுகத்தால் விசைப்படகுகள் கரையில் இருந்து சிறிது தூரம் ஆழப் பகுதியில் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து பிடித்து வந்த மீன்களை கரைக்கு கொண்டுவர இந்த நாட்டுப் படகுகள் மிகவும் உதவிகரமாக உள்ளது.

மேலும் கரையோரத்தில் மீன்பிடிக்கவும் இந்த நாட்டுப்படகு பயன்படுத்தப்படுகிறது. இதன் நீளமானது 26 அடி முதல் 27 அடி வரையிலும் உள்ளது. அகலமானது 5 முதல் 6 அடி வரையிலும், ஒரு டன் வரையிலும் இருக்கக்கூடிய இந்த நாட்டுப்படகில் 3டன் வரையிலும் சரக்குகள் ஏற்ற முடியும்.

இதையும் படிங்க:  உதயநிதி பட ஷூட்டிங் ஸ்பாட் இதுதானா... ராமநாதபுரத்தில் மிஸ் பண்ணக்கூடாத 5 கடற்கரைகள்

பிடித்து வரும் மீன்கள் தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து பகுதிக்கும் அனுப்பப்படுகிறது. தூத்துக்குடி கேரளா அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சிறிய விசைப்படகின் சிறப்பம்சங்கள் :-

இந்தவகை விசைப்படகானது இறால்களை பிடிக்க அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. அதிகளவு உள்ள ஆழப்பகுதிக்கு செல்லாமல் மீன்பிடிக்க படுகிறது. இதன் நீளம் 46 முதல் 47 அகலம் அகலம் 12 முதல் 13 வரையிலும் 2 டன் இருக்கக்கூடிய இந்த படகில் 5 டன் வரையிலும் சரக்குகள் ஏற்ற முடியும்.

விசைப்படகின் சிறப்பம்சங்கள்:-

விசைப்படகு தான் மீனவர்களின் உயிர்மூச்சே, கடலில் மீனவர்கள் உயிர்போனாலும் கூட விசைப்படகுகளை கரைக்கு கொண்டு வரநினைப்பர், விசைப்படகில் ஒரு தடவை வேலை வந்து விட்டால் பராமரிப்பதற்கு 5 லட்சம் வரையிலும் செலவாகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பெரிய விசைப்படகானது, 54 முதல் 55 அடி நீளமும், அகலம் 33 முதல் 34 அடி வரையிலும், 5 டன்‌ வரையிலும் எடை இருக்கக்கூடிய இந்த படகில் 8 டன் வரையிலும் மீன்களை பிடித்து ஏற்றி வரமுடியும்.

மீனவர்களின் விசைப்படகுகள் அதிக காற்று வீசும் நேரத்தில் ஒன்றோடு ஒன்று இடிந்து சேதமடைவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதனால் மீன்பிடி தொழில் லாபம் அடைவதை விட மிக்க நஷ்டம் தான் ஏற்படுகிறது என்று கவலை தெரிவிக்கின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி