ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் கவனத்திற்கு... 28ம் தேதி உங்களுக்காக நடக்கிறது மீனவர் குறைதீர் கூட்டம்..

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் கவனத்திற்கு... 28ம் தேதி உங்களுக்காக நடக்கிறது மீனவர் குறைதீர் கூட்டம்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Ramanathapuram Fishermen Grievance Day | ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அக்டோபர் 28 ஆம் தேதி மீனவர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தங்களது குறைகள் மற்றும் மீன்பிடிப்பது குறித்தும் அது தொடர்புடைய துறைகள் குறித்த குறைகளையும் தீர்த்துவைக்கும் நோக்கில் மீனவர் குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

ராமநாதபுரத்தில் அக்டோபர் 28 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு மீனவர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ் தலைமை தாங்குகிறார். அப்போது மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிக்கலாம். மீன்பிடித்தல், தகவல் தொடர்பு, வாக்கி டாக்கி, கருவிகள், எதிரி நாட்டு காப்பல் படை தாக்குதல், மீனவர் பாதுகாப்பு, உள்நாட்டு நேவி பாதுகாப்பு உள்ளிட்ட கருத்துக்களை மீனவர்கள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : ஆளை மயக்கும் பேரழகு... வால்பாறை அக்காமலைக்கு செல்லும் முன் இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

மேலும் இந்த கூட்டத்தில், மீனவர்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்படும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது. இது குறித்து மீனவர்கள் மனுவாகவும் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்பும் மீனவ சங்க பிரதிநிதிகள் கூட்ட அரங்கிற்கு வரும் முன் கணிணியில் தங்களது பெயர் முகவரி, செல்போன் எண் உள்ளிட்டவை பதிவு செய்ய வேண்டும். மனுக்களை கொடுக்கும் முன் ஒப்புதல் பெற்று, கணிணியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கூட்டத்தில், அரசுத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்துகொள்வதால் மீனவர் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம். மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Fishermen, Local News, Ramanathapuram