முகப்பு /ராமநாதபுரம் /

மீன்வளத் துறையை கண்டித்து ராமநாதபுரத்தில் மீனவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மீன்வளத் துறையை கண்டித்து ராமநாதபுரத்தில் மீனவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் மீனவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் மீனவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Ramanathapuram District News : ராமேஸ்வரத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் ஓரு தலைபட்சமான செயல்படுவதாக குற்றம்சாட்டி ஏ.ஐ.டி.யு.சி மீனவ சங்கத்தினர் டோக்கன் வழங்கும் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திலேயே ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம்தான் மிகப்பெரிய துறைமுகம். 800-க்கும் மேற்பட்ட விசைப்படைகளில் ஜந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெளியூரில் இருந்து வந்த பைபர் படகுகள் அனுமதி இல்லாமல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களோடு மீன்பிடித்துச் சென்று வந்தது.

இதனை தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள், அவர்களைதடுத்துநிறுத்தி பைபர் படகுகள் வெளியே சென்றால் மட்டுமே மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படும் என அறிவித்தனர். அதனால்,மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் இருந்தனர்.

இதையும் படிங்க : மாண்டஸ் புயலால் 4 பேர் உயிரிழப்பு.. 3,000 குடும்பங்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைப்பு

இதையடுத்து, மீனவ சங்கத்தலைவர்கள் தலையிட்டு 18 பைபர் படகுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.மற்ற நான்கு படகுகளுக்கு மட்டும் அனுமதி சீட்டு வழங்காமல் பைபர் படகானது கரையில் நிறுத்தப்பட்டிருந்தது.

இதனை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஏ.ஐ.டி.யு.சி மீனவ சங்கம் சார்பில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவல் பணியில் மீனவ சங்கத்தலைவர்கள் தலையிடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

18 பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க அனுமதி அளித்துமற்ற நான்கு படகுகளுக்கு மட்டும் தடை போடுவதை கண்டித்தும்மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் அனைத்து மீனவர்களுக்கு ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

First published:

Tags: Local News, Ramanathapuram