ஹோம் /ராமநாதபுரம் /

Ramanathapuram | புரட்டாசி மாத பாதிப்பு: மீன்களின் விலை குறைந்ததாக மீனவர்கள் வேதனை

Ramanathapuram | புரட்டாசி மாத பாதிப்பு: மீன்களின் விலை குறைந்ததாக மீனவர்கள் வேதனை

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மீன் விற்பனை

புரட்டாசி மாதம் என்பதாலும், டீசல் உள்ளிட்ட பொருள்கள் தொடர்ந்து விலை உயர்ந்ததாலும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

புரட்டாசி மாதம் என்பதால் மீன்களைக் குறைந்த விலைக்கே வியாபாரிகள் வாங்குகின்றனர் என்று மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு துறைமுகத்திலிருந்து நேற்று 80-க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிகளை பிடித்துவிட்டு கரை திரும்பினார்கள்.

இதையடுத்து மீதமுள்ள விசைப்படகுகள் டீசல் வாங்க முடியாதாலும் மீன்பிடிக்க சென்றாலும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே தங்களது விசைப்படைகளை நிறுத்தி வைக்கின்றனர்.

பாம்பன் மீன்பிடித் துறைமுகம்

புரட்டாசி மாதம் துவங்கிய நிலையில் அடுத்ததாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அசைவ உணவை சிறிது நாட்கள் தள்ளி வைத்து சைவ உணவுகளை மட்டும் உணவாக எடுத்துக்கொள்வார்கள்.

பாம்பன் மீன்பிடித் துறைமுகம்

இந்நிலையில், இதன் காரணமாக இங்கிருந்து வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் உணவகங்களிலும், சந்தைகளிலும் வெளிமாவட்ட வியாபாரிகளின் மூலம் வாங்கி செல்லும் மீன்களின் வியாபாரம் குறைந்தது. இதனால் வியாபாரிகள் குறைந்த விலைக்கே மீன்களை வாங்கிச்செல்கிறார்கள்.

மீன்கள் விற்பனை

புரட்டாசி மாதம் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடங்கியது. தொடங்கியநாளில் இருந்தே நேற்றுதான் மீனவர்கள் மீன் பிடிக்கவே கடலுக்குள் சென்றார்கள். புரட்டாசி மாதத்தில் கடவுளை வேண்டி இம்மாதம் முழுவதும் பலர் விரதமிருந்து அசைவ உணவை உண்ணமாட்டார்கள் அதனால் மீன்களின் விலை சற்று குறைந்துள்ளது.

இதை காரணமாக வைத்து சில வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து மீன்களை சென்ற மாதம் விற்ற விலையை விட பாதி விலைக்கு கீழும் மீன்களை வாங்கி சென்று வெளிமாநில மற்றும் வெளி மாவட்டத்துக்கு அனுப்புகிறார்கள். இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறுகின்றனர் மீனவர்கள்.

மீன் பிடிப்பதால் லாபம் இல்லை என்றால் கூட நஷ்டம் ஏற்படாமல் இருந்து கொண்டு தான் இருந்தது. தற்போது மிகவும் நஷ்டம் ஏற்படுவதால் மீன் பிடிக்கச் செல்லாமலே விசைப்படகுகளை கரையிலேயே நிறுத்தி வைக்கலாம் என்று வேதனை தெரிவிக்கின்றனர். அரிசி உள்ளிட்ட பொருள்களைக் கொள்முதல் செய்வதுபோல, மீன்களையும் அரசு கொள்முதல் செய்யவேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கைவைத்தனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram