மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் வலையில் அரியவகை சூரிய மீன் பிடிப்பட்டது.
சூரிய மீனின் சிறப்புகள்:-
800 மீட்டர் ஆழத்தில் வாழக் கூடியது, இவை நாளுக்கு 32 கிலோ மீட்டர் தூரம் நீந்தக் கூடியவை. ஒரு மணி நேரத்தில் 3.2 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும். இந்த மீன்கள் முதுகெலும்பில் இருந்து அதிகமாக 30 கோடி முட்டைகள் வரை முட்டை இடும் என்கின்றனர்.
இந்த மீன்கள் உயிரோடு இருந்தால் வலையிலிருந்து கடலுக்குள் திருப்பி விட்டு விடுவோம் என்றும் இறந்துவிட்டால் கரைக்கு கொண்டு வரும் என்று மீனவர்கள் கூறினர்.
அதிகபட்சமாக 4 அரை அடி நீளமும், ஆயிரத்து 300 கிலோ முதல் 2000 கிலோ வரை எடை வரையும் வளரும் தன்மை உடையது. இறால், சிப்பிகள், ஜெல்லி மீன், நத்தை ஆகியவற்றை வேட்டையாடி உட்கொள்ளும்.

சூரிய மீன்..
சிறிய வாய், துடுப்பு போன்ற உடலமைப்பு வால்பகுதி இல்லாமல் உடல் பெரிதாக இருந்தது. மண்டபம் மத்திய கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து மீனின் நீளம் அகலம், எடை ஆகியவற்றை சோதனை செய்தனர்.
சூரிய மீன் கன்னியாகுமரி பகுதியில் அதிகமாக வருவதாகவும் கன்னியாகுமரி மீனவர்கள் வலையில் சிக்கினாள், இதை கேரளாவிற்கு ஏற்றுமதி செய்வதாகவும் கூறினார்.
65 கிலோ எடை கொண்டது, நான்கு ஆண்டுகளுக்கு பின் பாம்பன் மீன்வர்கள் வலையில் சிக்கியுள்ளதாக மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அரிய வகை சூரிய மீனை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மீன் வியாபாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.