முகப்பு /ராமநாதபுரம் /

தேவிப்பட்டினத்தில் தந்தையுடன் மீன்பிடிக்கச் சென்ற மகன்... கடலில் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு..!

தேவிப்பட்டினத்தில் தந்தையுடன் மீன்பிடிக்கச் சென்ற மகன்... கடலில் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு..!

X
கடலில்

கடலில் விழுந்து இளைஞர் பலி

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் கடலில் தந்தையுடன் மீன்பிடித்து கொண்டிருந்த மகன் கடலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சேர்ந்தவர் அஜ்மீர் கனி. இவரது மகன் முகமது செல்வ ஹாஜி. இருவரும் வழக்கம்போல் தேவிப்பட்டினம் கடல் பகுதியில், தங்களுடைய‌ பைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்த கயிறு அறுந்ததில் கயிற்றை பிடித்து கொண்டிருந்த மீனவர் முகமது செல்வ ஹாஜி படகில் இருந்து கடலில் விழுந்து மாயமானார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாயமான மீனவர் முகமது செல்வ ஹாஜியை படகில் இருந்த அவரது தந்தை வெகு நேரமாக தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சக மீனவர்கள் முகமது செல்வ ஹாஜியை உயிரிழந்த நிலையில் கடலில் இருந்து மீட்டனர்.

இதையடுத்து அவரது உடலை, உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தேவிப்பட்டினம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Fisherman, Local News, Ramanathapuram