ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் இரட்டை மடி, சுருக்குமடி வலைகளுக்கு தடை விதிக்கக்கோரி மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரத்தில் இரட்டை மடி, சுருக்குமடி வலைகளுக்கு தடை விதிக்கக்கோரி மீனவர்கள் போராட்டம்

X
போராட்டத்தில்

போராட்டத்தில் மீனவர்கள்

Ramanathapuram } ராமேஸ்வரத்தில் இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளுக்கு எதிராக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

மீன்வளத்தை அழிக்கக்கூடிய இரட்டை மடி, சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதிக்க கோரி மீனவர் கூட்டமைப்பு சார்பாக ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு நூற்றுக்கு மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 500-க்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்களும் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது இரட்டை மடி மீன் பிடிப்பு சீசன் துவங்கி உள்ளதால், இந்த காலகட்டத்தில் ஏராளமான விசைப் படகுகள், இரட்டைமடி மீன்பிடிப்பு முறையை பயன்படுத்தி பலஆண்டுகளாக மீன்களைப் பிடித்து வருகின்றனர்.

இந்த மீன்பிடிப்பு காரணத்தினால் பெரிய மீன்கள் முதல் சிறிய மீன்கள் வரை வலையில் மாட்டுவதால் மீன்வளம் அழியும் சூழல் ஏற்படும். மேலும், இந்தப் பகுதியில் அரிய வகை பவளப் பாறைகள் உள்ளிட்ட அரிய வகை மீன் உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும்.

மீனவர்கள் போராட்டம்

இந்த இரட்டை மடி மற்றும் சுருக்குமடி மீன்பிடிப்பை தடைசெய்ய வேண்டும் எனவும், தொடர்ச்சியாக மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

இதையடுத்து, இந்த மெத்தனப் போக்கை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர் கூட்டமைப்பு சார்பாக மீனவர் சங்கத் தலைவர் என்.ஜே.போஸ் மற்றும் மீனவர் கூட்டமைப்பு பிரபாகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என ஏரளமானோர் கலந்து கொண்டு ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலக முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram