முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் முதன்முறையாக தென் இந்திய அளவிலான ஹாக்கி போட்டி..

ராமநாதபுரத்தில் முதன்முறையாக தென் இந்திய அளவிலான ஹாக்கி போட்டி..

X
ராமநாதபுரத்தில்

ராமநாதபுரத்தில் முதன்முறையாக தென்மாநில அளவிலான ஹாக்கி போட்டி

State Level Hockey Tournament in Ramanathapuram : ராமநாதபுரத்தில் முதன்முறையாக தென் இந்திய அளவிலான ஹாக்கி போட்டி, நடைபெற்று வருகிறது. போடியில் 6 மாநிலங்களை சேர்ந்த 240 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வேலுமாணிக்கம் விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சார்பில் தென் இந்திய அளவிலான 18 வயதிற்குட்பவர்களுக்கான முதலாவது ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த 240 வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். இப்போட்டியானது வரும் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் கர்நாடகம் – புதுச்சேரி அணிகள் மோதியது. இதில், கர்நாடக அணி 19-0 என்று வெற்றி பெற்றது.

தென்மாநில அளவிலான ஹாக்கி போட்டி

top videos

    இதையடுத்து, தமிழ்நாடு – கேரளா அணிகள் மோதியதில் தமிழ்நாடு 3-1 என்ற நிலையில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியானது சர்வதேச அளவிலான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இதில் சிறந்து விளையாடும் 15 வயதிற்கு உட்பட்ட ஹாக்கி வீரர்கள் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram, Sports