முகப்பு /ராமநாதபுரம் /

மதுபானக்கடையில் தகராறு... இருவருக்கு அரிவாள் வெட்டு; வாகனங்கள் தீவைப்பு- ராமநாதபுரத்தில் பரபரப்பு

மதுபானக்கடையில் தகராறு... இருவருக்கு அரிவாள் வெட்டு; வாகனங்கள் தீவைப்பு- ராமநாதபுரத்தில் பரபரப்பு

X
டாஸ்மாக்

டாஸ்மாக் கடை

Ramanathapuram | பரமகுடியில் மதுபானக் கடையில் ஏற்பட்ட தகராறில் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடியில் உள்ள அக்கிரமேசி கிராமம் மதுபானக்கடையில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இரண்டு இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காமன்கோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த இருளன் மற்றும் அவரது நண்பர்கள் அக்கிரமேசி கிராமத்தில் உள்ள மதுபானக்கடைக்கு சென்று உள்ளனர். இந்நிலையில், அக்கிரமேசி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் இருளன் தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்கியுள்ளனர்.

மேலும், மதுபானக்கடையின் வெளியே வந்தவுடன் அடையாளம் தெரியாத சிலர் அரிவாளால் தாக்கி இருசக்கர வாகனத்தினை தீவைத்து எரித்துள்ளனர்.

இதில், கார்த்திக் மற்றும் அதியமான் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து இருதரப்பினரும் நயினார்கோவில் மற்றும் சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் காமன்கோட்டை மற்றும் அக்கிரமேசி கிராமத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Ramanathapuram