ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின் பாத்தியப்பட்ட ராமேஸ்வரம் சுவாமி கோவிலின் எதிரே சன்னதி தெருவில் அமைந்துள்ள விக்ரமாதித்தன் மன்னன் வழிபட்ட உஜ்ஜயினி மகாகாளியம்மன் ஆலயத்தின் ஆச்சரியமூட்டும் வரலாறு சிறப்புகள் பற்றி அறிந்துகொள்ளவோம்.
இந்த ஆலயத்தின் வரலாறானது விக்ரமாதித்தன் என்ற மன்னன் உஜ்ஜயினி என்ற பேரண்ட தேசத்தினை ஆட்சி செய்தான். அவனுக்கு பிடித்த இஷ்ட தெய்வமாக உஜ்ஜயினி அம்மனை வழிபட்டு வந்தான். அரசனுக்கு போரில் வெற்றி பெற தேவயான அனைத்தையும் உஜ்ஜயினி அம்மன் அவனுக்கு அருள் புரிந்ததால் காலகாலமாக வணங்கி வந்தார். அவனின் ஆட்சிகாலகட்டம் முடிந்த பிறகு உஜ்ஜயினி அம்மனுக்கு பிடித்த இடத்தில் சென்று இருக்க வேண்டும் என்று எண்ணினான்.
அப்போது, வேதவிற்பனர்கள், பூஜகர்கள் பூஜைகள் செய்து மூலப்பொருட்கள் வைத்து பச்சை கலசத்தை உருவாக்கி அம்மனை ஆவாரம் செய்து அப்பகுதியில் இருந்த சமுத்திரம் (கடலில்) விட்டனர். சமுத்திரத்தில் விடப்பட்ட கலசமானது ஒவ்வொரு பேரண்டத்திற்கும் சென்று விட்டு இருதியாக ராமநாதபுரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் ராமேஸ்வரத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள ஆற்றாங்கரை என்னும் பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு ஆலயம் எழுப்பி வழிபட்டு வந்தனர். இதை அறிந்த சேதுபதி சமஸ்தான சிப்பாய்கள் சமஸ்தானத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற சேதுபதி மன்னர் அந்த கலசத்தை மீட்டு ராமநாதசுவாமி திருக்கோவிலில் வைக்குமாறு ஆணையிட்டார். ராமநாதசுவாமி திருக்கோவில் வைத்த பிறகு கோவிலுக்குள் அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெற தொடங்கியது, மேளதாளங்கள் ஓசை கேட்பது, சலங்கை கட்டி ஆடுவது போல் ஓசைகளும் கேட்பது போன்று தொடர்ந்து நடைபெற தொடங்கியது.
இதனால் கோவிலில் பணிபுரிந்தவர், மன்னரிடம் நடப்பதை பற்றி கூறி கலசம் வந்ததில் இருந்து இப்படி நடைபெறுவதாக தெரிவித்தனர். உடனடியாக மன்னர் கோவில் வேதவிற்பனர்கள், ராஜகுருமார்களை வைத்து பூஜை செய்து அந்த கலசத்தை பற்றிய பிரசனம் பார்த்து அம்மனை பற்றி அறிந்தனர். பெரும் தேசத்தினை ஆண்ட விக்ரமாதித்தன் மன்னன் வழிபட்ட தெய்வமான உஜ்ஜயினி அம்மன் அவனைவிட மிகவும் உக்கிரமான ஆக்ரோஷமான அம்மனாக வணங்கி வந்துள்ளான் என்று தெரியவந்தது.
இந்த உக்கிரமான அம்மனை சாந்தப்படுத்தி அமைதி வாய்ந்த அம்மனாக இருக்க என்ன செய்யலாம் என சேதுபதி சமஸ்தானம் மன்னர்கள் குழம்பிபோய் இருந்தனர். அப்போது ராஜகுருமார்களிடம் மன்னர் அம்மனை சாந்தமாக்க என்ன முயற்சி செய்யலாம் என முறையிட்டார், அதற்கு ராஜகுருமார்கள் ராமநாதர் சன்னதிக்கு எதிரே ஆலயத்தினனை உருவாக்கி வைத்தாள் அம்மன் சாந்தமாக இருக்கும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமிக்கு எதிரே அக்னி தீர்த்தம் கடற்கரைக்கு பின் இருந்த பிள்ளையார் கோவில் இருந்ததின் அருகில் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடத்தொடங்கினர்.
இங்கு இருந்து ஒரே நேரத்தில் உஜ்ஜயினி அம்மனையும், ராமநாதசுவாமியையும் வழிபட முடியும். ராமநாதசுவாமி மற்றும் உச்சயினி அம்மன் கருவரையும் பூமியில் இருந்து ஒரே நேர்கோட்டில் சரிசமமாக அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதசுவாமி சன்னதியின் எதிரே உள்ள நந்தி சிலையானது சற்று கழுத்து பகுதி மட்டும் வலதுபக்கமாக வளைந்து காணப்படும் அது ஏனென்றால் உச்சியினை காளியம்மன் ராமநாதசுவாமியை பார்க்கும் படியும் இருந்தால் சாந்தமாக இருக்கும் என்பதால் அவ்வாறு இருக்கும். மேலும், நான்கு திசைகளிலும் ராமநாதசுவாமி திருக்கோவிலினை காக்கும் தெய்வங்கலாக கிழக்கு பகுதியில் உஜ்ஜயினி மாகாளி அம்மனும், தெற்குப் பகுதியில் நம்பு நாயகி அம்மனும், மேற்கில் துர்க்கை அம்மனும், வடக்கு பத்திரகாளி அம்மனும் உள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இங்கு நவராத்திரி திருவிழா போது காப்புகட்டி 10 நாட்கள் விசேஷமாக நடைபெறும், இறுதியாக காப்புயவர்அம்மனுடன் சேர்ந்து ராமேஸ்வரம் தீவில் உள்ள அனைத்து பகுதிக்கும் சென்று விட்டு ஆலயத்தின் முன்பு பூக்குளி இறங்குவர், அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பது ஜதீகம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram