முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள்..

ராமநாதபுரத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள்..

X
வெளிநடப்பு

வெளிநடப்பு செய்த விவசாயிகள்

Ramanathapuram News : ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் செயலை கண்டித்து, விவசாயிகள் வெளி நடப்பு செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் 2ம் வெள்ளிக் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், குறைதீர் கூட்டதிற்கு, விவசாயிகள் அனைவரும் வந்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜானிடம் வர்கீஸ் கடந்த 2 முறை கூட்டத்திற்கும் வரவில்லை. தற்போது, நடைபெறக்கூடிய கூட்டத்திலும் பங்கு பெறவில்லை.

மேலும், இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், உயர் அதிகாரிகள் வராததால் விவசாயிகள் ஆத்திரமடைந்தனர். இந்நிலையில், ஆத்திரமடைந்த விவசாயிகள், நீண்ட நேரம் ஆகியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் வராததால் கூட்டத்திற்கு வந்திருந்த ஒட்டு மொத்த விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து, தற்போது 3 மாதமாக விவசாயிகள் கொடுக்கக்கூடிய மனுக்களுக்கு எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை, நெற்பயிர்கள் கருகியதால் வழங்கப்பட வேண்டிய வளர்ச்சி நிவாரணமும் முறையாக வழங்கப்படவில்லை எனவும் கூறினர். மேலும், கொடுக்கப்பட வேண்டிய பயிர் காப்பீடு நிவாரண தொகையை ஏக்கருக்கு 8000 வழங்க வேண்டும் எனவும் கூறி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தினை கோஷமிட்டு புறக்கணித்து வெளியிடப்பு செய்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram