ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம்: தண்ணீரின்றி காய்ந்து கருகிய நெற்பயிர்கள்.. விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

ராமநாதபுரம்: தண்ணீரின்றி காய்ந்து கருகிய நெற்பயிர்கள்.. விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

போராட்டத்தில் விவசாயிகள்

போராட்டத்தில் விவசாயிகள்

Ramanathapuram | ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகியதால், கருகிய நெற்பயிர்களோடு விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 1.28 லட்சம்ஏக்கரில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது.விவசாயிகள் நெற்பயிர்களை சாகுபடி செய்தநிலையில் எதிர்பார்த்த அளவு இந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் விவசாயிகள்ஏமாற்றமடைந்தனர.

மேலும், வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய பகுதிகளில் முறையாக திறந்து விடப்படாததால், இப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்து கருகிபோனது.

இந்நிலையில், ஏக்கர் ஒன்றுக்கு 30,000 வரை செலவு செய்து பயிரிட்டனர் விவசாயிகள். அந்த நெற்பயிர் போதுமான தண்ணீர் இல்லாததால் கருகிகாய்ந்து விட்டன‌. இதனால் காய்ந்து கருகிய நெற்பயிர்களோடு விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் நெற்பயிர்கள் பயிரிட்ட ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்றும்தங்களது கூட்டுறவு கடன் மற்றும் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

First published:

Tags: Agriculture, Farmers, Local News, Protest, Ramanathapuram