ஹோம் /ராமநாதபுரம் /

விளைநிலத்தின்‌ அருகில் உப்பளம்.. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ராமநாதபுரம் ஆனைகுடி விவசாயிகள்..

விளைநிலத்தின்‌ அருகில் உப்பளம்.. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ராமநாதபுரம் ஆனைகுடி விவசாயிகள்..

X
போராட்டத்தில்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

Ramanathapuram Farmers : ராமநாதபுரம் மாவட்டம் ஆனைகுடி கிராமத்தில் விளை நிலங்களுக்கு அருகில் உப்பளம் அமைக்கப்படுவதை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள ஆனைகுடி கிராமத்தின் கண்மாய்க்கு அருகில் 200 ஏக்கரில் நெல் பயிரிட்டு விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று விளை நிலங்களுக்கு அருகிலேயே உப்பளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. விவசாய விளை நிலங்களுக்கு அருகில் உப்பளம் அமைத்தால் நிலத்தடி நீர் உப்பாக மாறி விவசாயம் முற்றிலும் பாதிப்படையும். மேலும் நிலத்தடி நீரானது உப்பாக மாறினால் கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்.

இதனால், உப்பளம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் உப்பளம் அமைக்கும் பணி நடந்து வந்ததால் அந்த கிராமத்தினர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கானது நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில் தொடர்ந்து உப்பளம் அமைக்கும் பணி நடப்பதால் ஆத்திரமடைந்த ஆனைக்குடி கிராம விவசாயிகள், விவசாய பெண்கள் மற்றும் அந்த கிராமத்தினை சேர்ந்தவர்கள், உப்பளத்தை முற்றுகையிட்டு நிறுத்தக்கோரி போராட்டம் நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர், உப்பளம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி, உப்பளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலையாட்கள், டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை வெளியேற்றிய பின் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram