ஹோம் /ராமநாதபுரம் /

கடன் தள்ளுபடி செய்த சான்றிதழ் வழங்குக..! - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ராமநாதபுரம் விவசாயிகள்

கடன் தள்ளுபடி செய்த சான்றிதழ் வழங்குக..! - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ராமநாதபுரம் விவசாயிகள்

X
ஆட்சியருடன்

ஆட்சியருடன் விவசாயிகள் வாதம்

Ramanathapuram News : ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தடையை மீறி நுழைந்து மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தடையை மீறி நுழைந்து மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் உள்ள அஞ்சுகோட்டை, எட்டுகுடி திருத்தேர்வலை, சிருகம்பையூர் ஆகிய நான்கு கூட்டுறவு சொசைட்டிகளில் உறுப்பினர்களாக விவசாயிகள் உள்ளனர். இந்த கூட்டுறவு சொசைட்டியில் இருக்கும் விவசாயிகளுக்கு கடந்த ஆட்சியில் கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ் வழங்காததால், இந்த ஆண்டு சம்பந்தப்பட்ட நான்கு கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு விவசாய கடன் மற்றும் உரக் கடன் கொடுக்கவில்லை.

பலமுறை இதுதொடர்பாக விவசாய குறை தீர்க்கும் கூட்டத்திலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க :  காவேரிப்பட்டினம் அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள்..! என்ன என்ன தெரியுமா?

இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வரவழைத்து விவசாயிகளின் கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து, விவசாயிகள் மனுக்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கு முன்னதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தடுப்பு வேலிகளை தள்ளிவிட்டு உள்ளே சென்று தங்களது கோரிக்கையை எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

செய்தியாளர் : மனோஜ் குமார் (ராமநாதபுரம்)

First published:

Tags: Farmers, Local News, Ramanathapuram, Tamil News