Home /ramanathapuram /

கிசான் யோஜானா திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் ஜூலை 31க்குள் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்

கிசான் யோஜானா திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் ஜூலை 31க்குள் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பிரதமரின் கிஷான் யோஜனா திட்டத்தில் பயன்பெறுவது குறித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் 12-வது தவணை பணம் பெற ஆவணங்களை ஆன்லைனில் விவசாயிகள் ஜூலை 31-ந் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை அவர்களது வங்கி கணக்கில் தலா 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக ஆண்டு நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

    இத்திட்டத்தின்படி வேளாண் இடுபொருட்களை உரிய காலத்தில் கொள்முதல் செய்வதற்கும், இதர தேவைகளுக்காகவும் நிலம் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.

    இத்திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,08,000 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். தற்போது, 12-வது தவணை தொகை பெறுவதற்கு இந்த மாதம் 31-ந் தேதிக்குள் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபார்த்து கொள்வது அவசியம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில், பிரதமர் நிதி உதவி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் நில ஆவணங்களான பட்டா, சிட்டா, ஆதார் நகலுடன் சரிபார்த்து உறுதி செய்ய சமர்பிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    நில ஆவணங்களை உறுதி செய்த பின்னரே அடுத்த தவணைத் தொகை விடுவிக்கப்படும் என்று அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் உடனே ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கை இணைத்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்து தொடர்ந்து பயன் பெறலாம். இந்த தகவலை ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா தெரிவித்து உள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி