ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள் 

ராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள் 

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram Latest News | ராமநாதபுரத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது நடைபெற்றது, இந்த கூட்டத்தில் விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து கோரிக்கையை முன்வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கோரிக்கையாக கடந்த 2020 - 21 ஆம் ஆண்டுக்கான பயிர் கடன் தள்ளுபடிக்கான ரசீது 25 கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த விவசாயிகளான அவர்களுக்கு கிடைக்கவில்லை.

மேலும் படிக்க:  ராமேஸ்வரம் கோவிலில் 1 மணி முதல் 7 மணி வரை பக்தர்களுக்கு தடை - காரணம் இதுதான்

இதையடுத்து, இந்த ஆண்டு பயிர் கடன் மற்றும் அரசு விலையில் உரம் வாங்க முடியாமல் தவிப்பதாகவும் உடனடியாக பயிர் கடன் தள்ளுபடி ரசீது வழங்க கோரி விவசாயிகள் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் வேளாண் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், விவசாயிகள் அனைவரும் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் வேளாண்துறை அதிகாரிகளின் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram