முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.. விவசாயிகள் கோரிக்கை..

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.. விவசாயிகள் கோரிக்கை..

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம் விவசாயிகள்

Ramanathapuram News : ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களுக்கு கருகி சாவியானதால் வறட்சி நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.8000 வழங்ககோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்த விவசாயிகள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை நம்பி மூன்றரை லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. வடகிழக்கு பருவமழை போதிய அளவு இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் நெற்பயிர்களும் கருகின. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் கருகியதால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு டெல்டா மாவட்டங்களுக்கு அறிவித்தது போல் அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் தமிழக அரசு ராமநாதபுரம் மாவட்டத்தினை வறட்சி மாவட்டமாக அறிவித்து, ஒரு ஏக்கருக்கு ரூ‌. 8,000 நிவாரணத்தொகையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram